Latest News
Home / ஆலையடிவேம்பு (page 7)

ஆலையடிவேம்பு

அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் முன் முகப்பு மதில் “சத்தியம்” அமைப்பினால் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு புதுப்பொலிவுடன்……

“சத்தியம் “ வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பின் ஸ்தாபகர் சத்தியமூர்த்தி அவர்களினால் ஆலையடிவேம்பு கோட்டத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகளுக்கு உதவிகள் பல வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மாணவர்களின் மகிழ்வான சூழலையும் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்குவிக்கும் முகமாகவும் பாடசாலைகளுக்கு மதில் சுவர்களில் கல்வி சம்பந்தப்பட்ட அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அதனில் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று, ஶ்ரீ ராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.ரவிலேகா நித்தியானந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான தின நிகழ்வு இன்று…

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் விஞ்ஞான தின நிகழ்வு இன்று (21/11/2023) செவ்வாய்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதி அதிபர் திரு. ஜெயந்தன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுகளுக்கு வருகை தந்த அதிதிகளை இசை வாத்தியங்கள் இசைத்து மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். இன் நிகழ்விற்கு அதிதியாக திருக்கோவில் கல்வி வலயத்தின் நிர்வாக பிரிவு பிரதிக் கல்விப் பண்ணிப்பாளர் திரு.S.சுரனுதன் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு கல்விக் கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் எண்ணிக்கை விபரம்….

2023 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுகள் நேற்று நள்ளிரவு (16) வெளியாகிய நிலையில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் 60 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலைகள் ரீதியாக பார்க்கும்போது அறியக்கூடியதாக உள்ளது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளின் புலமைப்பரிசில் பரீட்சையில் 76 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று …

மேலும் வாசிக்க

பனங்காடு வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் பாவனைக்காக வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிப்பு….

உலக வங்கியின் நிதியுதவியில் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP திட்டத்தின் ஊடாக ஆலையடிவேம்பு, பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டிடம் திங்கட்கிழமை (13) பாவனைக்காக வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்கப்பட்டது. வெளிநோயாளர் மற்றும் கிளினிக் பிரிவுகளைக்கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டிடம் கையளிக்கும் நிகழ்வு பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் யூ.எல்.எம்.சகீல் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் கல்முனை பிராந்திய சகாதார சேவைகள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, சம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தினருக்கு மீண்டும் ஒரு வெற்றி கிண்ணம் இன்று…

தம்பட்டை ELEVEN STAR கழகம் நடத்திய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுபோட்டி தொடரின் இறுதிப்போட்டி இன்று (05) விநாயகபுரம், விநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் அக்கரைப்பற்று, சம்பியன்ஸ் விளையாட்டு கழகங்களுக்கிடையில் இடம் பெற்றது. குறித்த சுற்றுத்தொடரில் திறன்பட விளையாடி அக்கரைப்பற்று சம்பியன்ஸ் விளையாட்டு கழகம் வெற்றி வாகை சூடி வெற்றிக்கிண்ணத்தை தன்வசப்படுத்தியது. மேலும் குறித்த போட்டியில் திறம்பட விளையாடிய …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவர் Y.துலஸ்திகன் அகில இலங்கை இளையவர் மெய்வல்லுனர் போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றார்….

றிச்பரி (Richberry) அனுசரனையில் கொழும்பு சுகதாச மைதானத்தில் நடை பெற்ற அகில இலங்கை இளையவர் மெய்வல்லுனர் போட்டியில் Y.துலஸ்திகன் குண்டெறிதல் போட்டியில் வெண்கல பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்திற்கும் கமு/ திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் இவ் வருடம் இடம்பெற்ற கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் 14 வயது பிரிவின் சிறந்த மெய்வல்லுனராக தெரிவு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. Y.துலஸ்திகன் அவர்களுக்கு பிரதேச மக்கள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தனர் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ….

அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தனர் ஏற்பாட்டில் இன்றைய தினம் (04.11.2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை இரத்ததான முகாம் சத்ய சாயி சேவா நிலையத்த்தில் பிரதேச பல கொடையாளர்களின் வருகையுடன் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தில் நாளை (04) இரத்ததான முகாம்….

அக்கரைப்பற்று சத்ய சாயி சேவா நிலையத்தில் நாளைய தினம் (04.11.2023) சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 01.00 மணி வரை இரத்ததான முகாம் ஒன்று இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் சத்ய சாயி சேவா நிலையத்திற்கு நாளைய தினம் குறித்த நேரத்திற்கு வருகை தருவதன் மூலம் இரத்த தானம் வழங்க முடியும். இரத்த தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள் சில… 1. புற்றுநோய் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழாவின் எட்டாம் சடங்கு நாளை….

அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மனின் வருடாந்த அலங்கார சக்திப் பெருவிழாவானது நிகழாண்டு சோகங்கள் நீக்கிடும் சோபகிருது வருடம் புரட்டாதித் திங்கள் 28ஆம் நாள் (15.10.2023) ஞாயிற்றுக்கிழமை பிரதமைத் திதியும், சித்திரை நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப வேளையில் காலை 06.30 மணியளவில் அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் உற்சவ விழாக்கள் சிறப்பாக இடம்பெற்று. தீமிதித்தல் நிகழ்வு (24.10.2023) செவ்வாய்க்கிழமை காலை 06.30 மணியளவில் பல்லாயிரக்கணக்கான …

மேலும் வாசிக்க

அதிபர் தரம் – III இற்கான பரீட்சையில் ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்தில் இருந்து 09 ஆசிரியர்கள் சித்திபெற்று அதிபர்களாகத் தெரிவு…..

அதிபர் தரம் – III இற்கான எழுத்து மற்றும் நேர்முகப்பரீட்சைகளில் சித்திபெற்று திருக்கோவில் வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிலிருந்து 17 ஆசிரியர்கள் சித்தியடைந்து அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் இருந்து 09 ஆசிரியர்கள் அதிபர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலையடிவேம்பு கல்வி கோட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் பெயர் விபரம் பின்வருமாறு Mr.K.Maheswaran Mr.R.Satheesh Mr.H.Thayaparan Mr.R.Sutharshan Mrs.K.Jeyananthan Mr.K.Satkunananthan Mr.P.Thilakarajah Mr.K.janarththan Mrs.S.Sasikaran

மேலும் வாசிக்க