Latest News
Home / ஆலையடிவேம்பு (page 77)

ஆலையடிவேம்பு

உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 27ஆம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில்…

வி.சுகிர்தகுமார்   உலகத்தமிழர் கலை மற்றும் பண்பாட்டு பேரவையின் அம்பாரை மாவட்ட கிளை அங்குரார்ப்பண நிகழ்வு 27ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள  தமிழ் கலைஞர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக்குழுவினர். உலகத்தில் பரந்து வாழும் தமிழ் கலைஞர்கள் அனைவரும் ஓரணியாய் பேரணியாய் திரளும் மாபெரும் ஒன்று …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பகுதிகளில் கபிலநிறத்தத்தி கட்டுப்படுத்தல் விழிப்புணர்வு செயற்பாடு….

வி.சுகிர்தகுமார் நோய் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே பூச்சி நாசினிகள் விசிறப்பட வேண்டும். இல்லையேல் அது பயனற்றதாகிவிடும் என அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர்  ஏ.ஜ.ஏ.பெறோஸ் தெரிவித்தார். மேலும் ஒரே வகையான பூச்சி நாசினிகளை தொடர்ந்து பயன்படுத்துவதும் வீணான முயற்சியாகும் என குறிப்பிட்ட அவர் மூன்று கட்டங்களாக நோய்தாக்கத்தை பொறுத்து பூச்சி நாசினிகள் பயன்படுத்தப்படவேண்டும் எனவும் கூறினார். நெற் செய்கையினை பெரிதும் பாதிக்கும் அறக்கொட்டி எனும் கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று மாபெரும் டெங்கொழிப்பு சிரமதானப்பணிகள்…

வி.சுகிர்தகுமார்   நாட்டில் டெங்கு நோய் பரவுதலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. பொதுமக்களின் குடியிருப்புக்கள் மாத்திரமின்றி அரச திணக்களங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பொது இடங்கள் என பல்வேறு பகுதிகளிலும் டெங்கொழிப்பு சிரமதானங்களை மேற்கொள்ளுமாறு சுகாதார பிரிவினரின் மூலமாக அறிவுறுத்தல்களையும் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று மாபெரும் சிரமதானப்பணிகள் பிரதேச செயலகத்தின் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுவாகரின் தலைமையில் அவரது அறிவுறுத்தலுக்கமைய மேற்கொள்ளப்பட்டது. …

மேலும் வாசிக்க

ஆலம் விழுதுகள் அமைப்பினர் 1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி வைத்தனர்.

வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பினர் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட  1200 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான செயலட்டைகளை வழங்கி (09)வைத்தனர். அம்பாரை மாவட்ட ஆலம் விழுகள் அமைப்பின் இணைப்பாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான சு.ஸ்ரீதரன் தலைமையில் கல்வி வலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் கலந்து கொண்டு செயலட்டைகளை அதிபர்களிடம் வழங்கி வைத்தார். ஆலம் விழுதுகள் அமைப்பானது அம்பாரை மாவட்டம் முழுவதிலும் பசுமைப்புரட்சி திட்டம் …

மேலும் வாசிக்க

சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும்

வி.சுகிர்தகுமார்  இலங்கை நாட்டிற்கு கராத்தே துறையில் பெருமை சேர்த்த அமரர் சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் அவர்களின் 6ஆவது ஆண்டு நினைவு கூரலும் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் அக்கரைப்பற்றில்  நேற்றிரவு (06) நடைபெற்றது. இலங்கை கராத்தே சம்மேளனத்தின் இரண்டு முறை தலைவராகவும், ஜே.கே.எம்.ஓ. சங்கத்தின் பிரதம போதனாசிரியராகவும், சோட்டோகான் கராத்தே சம்மேளனத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்து கராத்தே துறைக்கு பல்வேறு பணிகளை ஆற்றிய அன்னாரது ஞாபகார்த்த நிகழ்வு ஆறாவது வருடமாகவும் உணர்வு …

மேலும் வாசிக்க

பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி

வி.சுகிர்தகுமார்  கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி நேற்றிரவு(05) இடம்பெற்றது. பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில்  கடந்த 31ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகி குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் இடம்பெற்று வந்தன. அம்மனின் உற்சவம் கிரியைகள் கடந்த 01 ஆம் திகதி …

மேலும் வாசிக்க

அம்பாறையில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: மூவர் கைது

வி.சுகிர்தகுமார் அம்பாறை – ஆலையடிவேம்பு ,கண்ணகிபுரம் பிரதேசத்தில் 14 வயது சிறுமியுடன் இளைஞன் ஒருவன் குடும்பம் நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.எல்.ஏ.றஸீட் உத்தரவிட்டார். நேற்று முன்தினம்  வியாழக்கிழமை (04.06.2020) மாலை பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது அக்கரைப்பற்று …

மேலும் வாசிக்க

தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமனம்

வி.சுகிர்தகுமார்   அக்கரைப்பற்றை சேர்ந்த தருமரெத்தினம் கணேசரெத்தினம் மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரியின் நிரந்தர உப பீடாதிபதிகளுள் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தை இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழு அன்மையில் வழங்கி வைத்துள்ளது. அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் தனது ஆரம்பகல்வியை அக்கரைப்பற்று அல்ஹிதாயா வித்தியாலயத்தில் பயின்றார். பின்னர் கல்முனை பற்றிமா தேசிய பாடசாலையில் கல்வியை தொடர்ந்த அவர் உயர்தரக்கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் மகாவித்தியாலயத்தில் …

மேலும் வாசிக்க

பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நாளை

வி.சுகிர்தகுமார்   கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்று கிழக்கில்; சிறப்புற்று விளங்கும் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய  வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி மகோற்சவம் நாளை (05) இடம்பெறவுள்ளது. பொற்புறா வந்த காவியத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில்  கடந்த 31ஆம் திகதி வாஸ்து சாந்தியுடன் கிரியைகள் ஆரம்பமாகி குறிப்பிட்ட மக்கள் பங்கேற்புடன் இடம்பெற்றுவருகின்றன. அம்மனின் உற்சவம் கிரியைகள் கடந்த 01 …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு தில்லையாற்று பகுதியில் ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது.

வி.சுகிர்தகுமார்  அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலையடிவேம்பு தில்லையாற்று பகுதியில் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் இன்று விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தில்லையாற்றின் கரையோரப்பகுதியில் நீருள் புதைக்கப்பட்டிருந்த வெடி பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே குறித்த இடத்திற்கு சென்ற மருதமுனை முகாம் விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் வெடிபொருட்கள் நீருள் இருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் …

மேலும் வாசிக்க