Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பகுதிகளில் கபிலநிறத்தத்தி கட்டுப்படுத்தல் விழிப்புணர்வு செயற்பாடு….

ஆலையடிவேம்பு பகுதிகளில் கபிலநிறத்தத்தி கட்டுப்படுத்தல் விழிப்புணர்வு செயற்பாடு….

வி.சுகிர்தகுமார்

நோய் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே பூச்சி நாசினிகள் விசிறப்பட வேண்டும். இல்லையேல் அது பயனற்றதாகிவிடும் என அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர்  ஏ.ஜ.ஏ.பெறோஸ் தெரிவித்தார்.

மேலும் ஒரே வகையான பூச்சி நாசினிகளை தொடர்ந்து பயன்படுத்துவதும் வீணான முயற்சியாகும் என குறிப்பிட்ட அவர் மூன்று கட்டங்களாக நோய்தாக்கத்தை பொறுத்து பூச்சி நாசினிகள் பயன்படுத்தப்படவேண்டும் எனவும் கூறினார்.

நெற் செய்கையினை பெரிதும் பாதிக்கும் அறக்கொட்டி எனும் கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாட்டை அக்கரைப்பற்று கிழக்கு  விவசாய விஸ்தரிப்பு காரியாலய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

நிலையத்தின் பொறுப்பதிகாரி விவசாயப்போதனாசிரியர் எம்.எஸ்.எம்.நிப்றாஸ் தலைமையில் இன்று (15) முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கையில்    அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர்  ஏ.ஜ.ஏ.பெறோஸ் கலந்து கொண்டு மக்களுக்கான தெளிவூட்டல்களை வழங்கினார்.

கபில நிறத்தத்திகள் அம்பாரை மாவட்டத்தில் மீண்டும் தலைதூக்கும் நிலையில் அக்கரைப்பற்று நீத்தையாறு பாலம் அருகில் ஒன்றிணைந்த அதிகாரிகள் கபிலநிறத்தத்திகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பதாதையினை ஏந்தி விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டதுடன்; துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினர். வயல் வெளிகளில் நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்பதை எவ்வாறு கண்டறிவது என்பது தொடர்பிலும் செயல்முறை விளக்கமளித்தார்.

பின்னர் ஆலையடிவேம்பு  சந்தைப்பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வழிப்புணர்வு செயற்பாட்டிலும் ஈடுபட்டதுடன் அங்கு குழுமியிருந்த மக்களுக்கும் கபிலநிறத்தத்தி கட்டுப்படுத்தல் தொடர்பான துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினர்.

இதேநேரம் ஒலிபெருக்கி மூலமாகவும் வாகனத்தின் உதவியுடன் வீதி வீதியாக சென்று விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர்.

இத்தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்காக விவசாயிகள் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட எப்லோட் மற்றும் ஜாவோ போன்ற களைநாசினியையும் இரண்டாம் கட்டமாக செஸ், எக்டாரா, வர்டெகோ போன்ற களைநாசினியையும் இறுதிகட்டமாக மார்ஷல் மற்றும் விபிஎம்சி போன்ற களைநாசினியையும் பயன்படுத்த முடியும் எனவும் அம்பாரை மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் கரையோரப்பிரதேச சிரேஸ்ட விவசாயப்போதனாசிரியர்  ஏ.ஜ.ஏ.பெறோஸ் விளக்கமளித்தார்.

பிரசார நிகழ்வில் விவசாயப்போதானாசிரியர் எஸ்.நர்மதன் விவசாய தொழிநுட்ப உத்தியோகத்தர் ரி.ஏ.தக்ஷிலா பிரியதர்சினி உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *