Latest News
Home / Kirishanth admin (page 550)

Kirishanth admin

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் – கோட்டா, மஹிந்த உத்தரவு!

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1000 ரூபாய் சம்பள உயர்வினை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அத்தோடு இதற்கான நடவடிக்கைகளை விரைவில் செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த அறிவிப்பு தொடர்பாக நாளை உத்தியோகப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை இன்று காலை தமிழ் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போது மலையக …

மேலும் வாசிக்க

பொதுமக்களுக்கு 7 நாட்கள் காலக்கெடு விதித்தது பாதுகாப்பு அமைச்சு!

சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு காலக்கெடு விதித்துள்ளது. அந்தவகையில் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை 7 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த ஆண்டு 09 ஆம் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் சட்டவிரோதமாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய முப்படை உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் …

மேலும் வாசிக்க

விமானத்தை தாக்கி வீழ்த்திய ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஐந்து நாடுகள் தீர்மானம்!

உக்ரேனிய விமானத்தை ஈரான் ஏவுகணை மூலம் வீழ்த்திய விவகாரம், தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 5 நாடுகள் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உக்ரேன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் இராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதில் 82 ஈரானியர்கள் மற்றும் 63 கனடா நாட்டவர் உட்பட 176 பயணிகள் உயிரிழந்தனர். இந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்துக்குள்ளானதாக ஈரான் ஆரம்பித்தில் கூறியிருந்தாலும், …

மேலும் வாசிக்க

ஹரி – மேகனின் எதிர்காலம் குறித்து பிரதமர் ஜோன்சன் நம்பிக்கை

இளவரசர் ஹரி – மேகன் ஆகியோரின் எதிர்கால வகிபாகம் தொடர்பாக அரச குடும்பம் தீர்மானிக்கும் எனத் தான் நம்பிக்கை கொள்வதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தின் முன்னணி வகிபாகத்தில் இருந்து விலகவுள்ளதாக கடந்த புதன்கிழமை அறிவிப்பு விடுத்திருந்தனர். அரச குடும்பத்தினர் இந்த விடயத்தினை இலகுவாகத் தீர்த்துக்கொள்வார்கள் என்று தான் நம்புவதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிபிசியின் காலைநேர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது குறிப்பிட்டார். …

மேலும் வாசிக்க

சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது – ஞானசார தேரர்

இனவாத செயற்பாடுகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாது செய்ய, அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் சிங்களவர்களை பாதுகாக்க மூன்றாவது சக்தி ஒன்றின் தேவை …

மேலும் வாசிக்க

‘ஜெனிவா’வில் அரசுக்கு காத்திருக்கிறது ஆபத்து – சந்திரிகா ஆரூடம்

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு சிறுபான்மை இன மக்களைக் கவனத்தில் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றது. அதேவேளை, சர்வதேசத்துடன் முரண்படும் வகையில் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றது. எனவே, இம்முறை ஜெனிவாவில் கோட்டாபய அரசு எதிர் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்.” – இவ்வாறு தெரிவித்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. ஜ.நா. மனித உரிமைகள் சபையின் 40ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 25ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. மார்ச் …

மேலும் வாசிக்க

தனியார் உரையாடல்கள் ஊடகங்களில் கசிந்தமை தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு – சபாநாயகர்

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான தனியார் தொலைபேசி உரையாடல்களின் பதிவுகள், தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழில்நுட்பம் நாட்டிற்கு நல்லது என்றாலும், இதனை தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான குரல் …

மேலும் வாசிக்க

பதவியை ராஜினாமாச் செய்வதாக வாசுதேவ அறிவிப்பு?

மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தேவையான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் போதுமான நிதியை வழங்காவிடின் தனது பதவியை ராஜினாமாச் செய்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “தண்ணீர் இல்லாமல் சிரமப்படும் மக்களுக்கு உரிய  தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. மேலும் தண்ணீர்ப் பிரச்சினைக்கு கடந்த அரசாங்கம் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச குழந்தைகளுக்கு ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தினரால் பால்மா பக்கெற்றுக்கள் வழங்கிவைப்பு…..

வடகீழ் பருவக் காற்றுடன் கூடிய பருவ மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கோளாவில்-01, கோளாவில்-02, கோளாவில்-03, நாவற்காடு, அக்கரைப்பற்று7/4, வச்சிக்குடா ஆகிய பிரதேசங்களைச்சேர்ந்த மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையில் ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் பங்களிப்பில் இன்றைய தினம் திங்கள்கிழமை (13)  பி.ப 01.30 மணியளவில் ஆலையடிவேம்பு இந்து மாமன்ற கட்டிட வளாகத்தில் ஆலையடிவேம்பு இந்து மாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் அவர்களின் தலைமையில் பயனாளிகளுக்கு பால்மா …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் அம்புயூலன்ஸ் வண்டியிலேயே குழந்தையை பிரசுவித்த தாய்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் அமைந்துள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையின்போது தாய் ஒருவர்  அம்புயூலன்வண்டியிலேயே குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று நேற்று சனிக்கிழமை (11ம் திகதி) இரவு இடம்பெற்றுள்ளது. கரடியனாறு பிரதேசத்திலுள்ள தும்பாலை எனும் கிராமத்திலிருந்து தாய் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அவர்கள் 1990 இலவச அம்புயூலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டபோது கரடியனாறு பிரிவிலுள்ள  அம்புயூலன்ஸ் வண்டி வேறு சேவையில் ஈடுபட்டதனால் வவுணதீவு நிலையத்தின்  அம்புயூலன்ஸ் வண்டி …

மேலும் வாசிக்க