Latest News
Home / தொழில்நுட்பம் / 30 ஆண்டுகளுக்குப்பின் கணினி விசைப்பலகையில் மாற்றம்!

30 ஆண்டுகளுக்குப்பின் கணினி விசைப்பலகையில் மாற்றம்!

30 ஆண்டுகளாக விசைப்பலகையில் எந்த ஒரு புதிய வசதியையும் அறிமுகப்படுத்திடாத மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிய பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்டுடன் இணைந்து செயல்படும் மடிகணினி மற்றும் கணினி உற்பத்தியாளர்கள் புதிய பட்டனை அறிமுகப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த புதிய பட்டன் மைக்ரோசாப்டின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான ‘கோபைலட்’டை பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பட்டன் மூலமாக கோபைலட்டை எளிதாகச் செயல்படச்செய்யலாம் எனத் தெரிவித்துள்ளனர். வெறும் இணையவழிச் சேவைகள் மட்டும் இல்லாமல் உள்பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கோபைலட் செயல்படும் எனக் கூறப்படுகிறது.

கடைசியாக 30 வருடங்களுக்கு முன் ‘விண்டோஸ்’ பட்டனை அறிமுகப்படுத்தியிருந்த மைக்ரோசாப்ட் இப்போது இந்து வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Check Also

ட்விட்டர் த்ரெட்ஸிற்கும் இடையில் கடும் மோதல்

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *