Latest News
Home / சுவாரசியம் / ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்திய கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனம்

ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்திய கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனம்

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த மைக்ரோ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும்.

இதேவேளை இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மைக்கேல் காஸ்புரோவிக் தெரிவித்துள்ளார்.

இந்த பந்தின் விசேட அம்சங்கள் :

* கிரிக்கெட் பந்துகளில் மிகவும் சிறிய அளவிலான கீழே விழுந்துவிடாத அளவில், அதிர்வுகளைத் தாங்கக்கூடிய சிப்புகள் பந்தில் பொருத்தப்படும்.

* இந்தப் பந்து வீசப்படும் போது பந்தின் வேகம், பந்துவீச்சாளர் கையை விட்டு பந்து வெளியேறும்போது அதன் வேகம், தரையில் பட்டு பவுன் ஆகும்போது அதன் வேகம், பவுன்ஸருக்குப் பின் துடுப்பாட்ட வீரரை நோக்கிச் செல்லும்போது வேகம் ஆகியவற்றை மிகத் துல்லியமாக அறிய முடியும்.

* சுழற்பந்துவீச்சாளர் பந்துவீசும்போது பந்து எந்தப் பக்கம் சுழலும், எந்தப் பக்கம் செல்லும் என்பதை பந்து காற்றில் சுழன்று செல்லும்போதே கண்டுபிடிக்க இயலும்.

* டிஆர்எஸ் முறை இருந்தாலுமே அதிலிருந்து கிடைக்கும் ஆட்டமிழப்பு முடிவுகள் மிகத்துல்லியமாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட் பந்து  வந்துவிட்டால், உண்மையில் பந்து ஸ்டெம்பில் பட்டதா, அல்லது உரசிச் சென்றதா, துடுப்பாட்ட வீரரின் கால்காப்பில் பட்டு துடுப்பாட்ட மட்டையில் பட்டதா அல்லது நேரடியாக துடுப்பாட்ட மட்டையில் பட்டு கால்காப்பில் பட்டதா என்பதை மிகத்துல்லியமாக அறிய முடியும்.

* மேலும் ஒருவீரர் பிடியெடுத்ததில் சர்ச்சை எழுந்தால்கூட பந்து எந்த நேரத்தில் பிடிக்கப்பட்டது, தரையில் பட்டு பிடிக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே பிடிக்கப்பட்டதா என்பதையும் அறியலாம். இதன் மூலம் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்புகளுக்கு தீர்வு காண முடியும்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *