Latest News
Home / விளையாட்டு / ஸ்டம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய TOP 5 கீப்பர்கள் பட்டியல்!

ஸ்டம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய TOP 5 கீப்பர்கள் பட்டியல்!

கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் விழிப்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்தை ஒரு நொடிதான் தவிர விடுவார் தவறவிட்ட உடன் உடனடியாக பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து ஸ்டம்பிங் செய்ய வேண்டும். அப்படி அதிகமாக ஸ்டம்பிங் செய்துள்ள விக்கெட் கீப்பர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்துள்ள எம்எஸ் டோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

இலங்கை அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் குமார் சங்ககாரா. இவர் இடதுகை ஆட்டக்காரர் மொத்தம் 404 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

கழுவிரதனா 1990 களில் இலங்கை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் ஆவார். இவர் 189 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 75 ஸ்டம்பிங் செய்துள்ளார் அந்த அளவிற்கு திறமைக்காரர்.

பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான மொயின் கான் 1990 முதல் 2004 வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடியவர் 219 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 73 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் கில்கிறிஸ்ட் 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 55 ஸ்டம்பிங் மட்டுமே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *