Latest News
Home / தொழில்நுட்பம் / லைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேஸ்புக்

லைக்ஸ்களின் எண்ணிக்கையை மறைக்கும் பேஸ்புக்

பேஸ்புக்கின் பதிவுகளில் இருந்து விருப்பக் குறிகளின் (likes) எண்ணிக்கையை ‌மறைப்பது தொடர்பான சோதனை, அவுஸ்திரேலியாவில் நடத்தியுள்ளது.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பயன்படுத்தாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பான்மையானவர்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் செய்யப்பட்டு வருகின்றன.  இப்போது ’லைக்-ஹைடிங்’ செயல்முறையை அறிமுகப்படுத்தப்படுகிறது. பயனர்கள் மத்தியில் நேர்மறையான கருத்துகளை ஏற்படுத்துவதற்காக, இந்த செயல்முறையை பேஸ்புக் அறிமுகப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

பேஸ்புக் பயனர்கள் பகிரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிக்களுக்கு அவர்களை பின் தொடர்வோர்கள் மற்றும் பிற பயனர்கள் லைக்ஸ்களை பதிவிடலாம். இது பயனர்கள் மத்தியில் எதிர்மறை எண்ணங்களை விதைப்பதாக தகவல் வெளியானது. இதனால் பேஸ்புக் பதிவின் விருப்பக் குறிகளை (likes) யாரும் பார்க்க முடியாத அளவிற்கு “லைக்-ஹைடிங்” என்ற சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சி அவுஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

“பேஸ்புக்கை ஒரு போட்டியாக உணர நாங்கள் விரும்பவில்லை” என்று பேஸ்புக் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேஸ்புக்கைப் பயன்படுத்துகின்றனர், ஆனால் மாபெரும் சமூக ஊடக தளம் உள ஆரோக்கியத்தில் ஏற்படும்  தாக்கத்தை  எதிர்த்துப் போராட அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *