Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் சிவனருள் பவுண்டேஷன் அனுசரணையில் கேக் ஐசிங் செய்தல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு….

திருக்கோவில் பிரதேச செயலகம் மற்றும் சிவனருள் பவுண்டேஷன் அனுசரணையில் கேக் ஐசிங் செய்தல் பயிற்சியை முடித்த யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு….

திருக்கோவில் யுவதிகளை வலுவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கேக் ஐசிங் செய்தல் பயிற்சியை முடித்த 50ற்கும் மேற்பட்ட யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு. த.கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இளைஞர்களை பலவழிகளிலும் வலுவூட்டும் செயற்பாடுகளிலும், மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை அபிவிருத்தி செய்யும் பல வேலைத்திட்டங்களையும் தனது நேரடியான கண்காணிப்பு மற்றும் நேரடியான களவிஜய செயற்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி பல சமுகநல திட்டங்களை முன்னெடுத்துவரும் பிரதேச செயலாளர் திரு.த. கஜேந்திரன் அவர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திரு.க. சதிசேகரன் அவர்கள் மற்றும் சிவனருள் பவுண்டேஷன் தலைவர் கலாநிதி அனுஷியா ஆகியோரின் தலைமையின் கீழ் இன் நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக இளைஞர்கள் சேவை உத்தியோகத்தர் திரு. பிரபாகரன் அவர்கள் கேக் டிசைனிங் ஆசிரியை கலைச்செல்வி நிர்வாக பிரம முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு. சசிந்திரன் அவர்கள் மற்றும் திருக்கோவில் பிரதேச இளைஞர் கழக இணைப்பாளர்ள் திரு.நிஷாந்தன் மற்றும் திரு.ஜெனார்த்தன் ஆகியோரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழலில் இளைஞர் யுவதிகள் சுயதொழிலை கற்பதோடு நின்று விடாமல் அதை தங்கள் சொந்த வாழ்வில் அப்பியாசப்படுத்தி எவ்வாறு எதிர்கால சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் தனது கருத்துகளை முன்வைத்ததுடன் இக் கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

ஜே.கே.யதுர்ஷன்

 

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *