Latest News
Home / உலகம் / ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது.

குறித்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து இதன்போது ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா ஆகிய அபிவிருத்தியடைந்த நாடுகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், ஜி-20 உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் இந்தியாவிற்கு வருகை தர இருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டில் அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஸ்பென் நாட்டின் துணை ஜனாதிபதி நடியா கேல்வினோ, பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இந்திய பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஜி20 மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமை என்பன இதன்போது ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

500 வது நாளில் உக்ரைன் போா்!

உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்து சனிக்கிழமையுடன் 500 நாள்கள் நிறைவு பெறுகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *