Latest News
Home / உலகம் / கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மனித பரிசோதனையை திட்டமிட்டுள்ள தாய்லாந்து

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான மனித பரிசோதனையை திட்டமிட்டுள்ள தாய்லாந்து


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த கண்டுபிடித்த தடுப்பூசி பரிசோதனையை எதிர்வரும் நவம்பர் மாதம் மனிதர்களிடையே பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தாய்லாந்தின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

அந்தவகையில் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் பயன்படுத்த தயாராக இருக்கும் வகையில் 10,000 அளவுகள் தயாரிக்கப்படுவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த தடுப்பூசியின் பரிசோதனைகள் விலங்குகளிடையே சாதகமான முடிவுகளை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மனித சோதனைகளுக்கான தடுப்பூசி அளவுகளை தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா வைரஸிற்கு எதிரான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் சீனாவில் சினோவாக் பயோடெக் லிமிடெட், பரிசோதனை தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோதனைகள் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், தாய் நிறுவனமான பயோநெட்-ஆசியா பெரிய அளவிலான உற்பத்திக்கான அதன் வசதிகளைத் தயாரிக்கிறது என பேங்காக்கின் சுலலாங்கொர்ன் பல்கலைக்கழக தடுப்பூசி அபிவருத்தி திட்டத்தின் பணிப்பாளர் கியாட் ருக்ஸ்ருங்தாம் கூறியுள்ளார்.

மேலும் அனைத்தும் திட்டத்தின் படி நடந்தால், அடுத்த ஆண்டு மூன்றாவது அல்லது நான்காவது காலாண்டில் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி தாய்லாந்திற்கு தயாராக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய நிலவரப்படி தாய்லாந்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 3,217 ஆக காணப்படுவதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 58 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *