Latest News
Home / ஆலையடிவேம்பு / கவடாப்பிட்டி மக்களின் குமுறலுக்கு இரு நாட்களில் தீர்வு!!! எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறநெறி பாடசாலை திறப்பு விழா!

கவடாப்பிட்டி மக்களின் குமுறலுக்கு இரு நாட்களில் தீர்வு!!! எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறநெறி பாடசாலை திறப்பு விழா!

ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம மக்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து அவர்களுக்கான உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுத்து வருகின்ற நிலையில் கவடாப்பிட்டி கிராமத்திற்கு நேரில் சென்று கவடாப்பிட்டி கிராம மக்களின் பிரச்சனைகள் பற்றி (09/09/2019) திங்கள் அன்று கேட்டு அறிந்துகொண்டோம்.

கவடாப்பிட்டி கிராம மக்கள் கூறிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக 30 மாணவர்கள் அளவில் அறநெறி பாடசாலைக்கு செல்ல ஆர்வம் உள்ள மாணவர்கள் இருக்கின்ற போதிலும் செல்வதற்கு எங்களுக்காக ஒரு அறநெறி பாடசாலை இல்லை என அவர்களின் வேதனையினை கூறியதோடு மேலும் இரண்டாவது பிரச்சினையாக எங்கள் பாடசாலை செல்லும் பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புக்கள் எதற்கும் பொருளாதார பிரச்சினை காரணமாக செல்லாமல் வீதிகளில் சேர்ந்து விளையாடுதல் பிரத்தியேக வகுப்பிற்கு செல்லும் நேரத்தினையும் இதுபோன்ற செற்பாடுகளில் வீண்ணடித்து கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றார்கள் என்பதனையும் வேதனையுடன் குறியிருந்ததுடன் அதற்கான உதவிகளை செய்துதருமாறு எங்கள் இணையக்குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

அவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொண்ட இணையக்குழு உடனடியாக அன்றயதினமே ஆலையடிவேம்பு இந்துமாமன்ற தலைவர் கனகரெட்ணம் ஐயா அவர்களை நேரில் சென்று பிள்ளைகளுக்கான அறநெறி பாடசாலை தொடர்பான பிரச்சினையினை அறியப்படுத்தி இருந்தோம் அதுமாத்திரம் இல்லாமல் இந்துமாமன்ற தலைவர் கனகரெட்ணம் ஐயாவிடமிருந்து சாதகமான பதில்களையும் பெற்றுக்கொண்டோம்.

அவர்களின் சாதகமான பதிலைபெற்று காலம் தாழ்த்தாமல் உடனடியாகவே இந்துமாமன்ற தலைவர் கனகரெட்ணம் ஐயா, இந்துமாமன்ற உறுப்பினர்கள், கவடாப்பிட்டி கிராம மக்கள்,அறநெறி பாடசாலையில் கல்விகற்க இருக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள் என்பவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து எமது இணையக்குழுவின் இயக்குனர் கிரிசாந், இணையக்குழுவின் தலைவர் விபுர்தன், பிரதித்தலைவர் அபிராஜ் அவர்களின் தலைமையில் இன்று (11.09.2019) மாலை 04.30 மணியளவில் கவடாப்பிட்டி கிராமத்தில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து இடம்பெற்றது.

இவ் கலந்துரையாடலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் அறநெறி பாடசாலை கவடாப்பிட்டி கிராம மக்களின் பிள்ளைகளுக்காக திறந்துவைக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்துமாமன்ற தலைவர் கனகரெட்ணம் ஐயா ஆலையடிவேம்புவெப் இணையக்குழு மக்களின் பிரச்சினைகள் பற்றி கேட்டறிந்து அவர்களுக்கான உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் சேவை பற்றி உரையாற்றினார். தனது ஆசீர்வாதத்தினையும் வாழ்த்துக்களையும் இணையக்குழுவிற்கு தெரிவித்தார்.

Check Also

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *