Latest News
Home / ஆலையடிவேம்பு / ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு: அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் தேவசபையில் இன்று…

ஏப்ரல் 21 தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு: அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் தேவசபையில் இன்று…

வி.சுகிர்தகுமார்  

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் தாக்குதலின் இரண்டாவது வருட நினைவாக இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் தேவசபையில் இன்று நடைபெற்றது.

மனித நேயத்தை அனைவரும் பின்பற்றுவோம் எனும் தொனிப்பொருளில் அம்பாரை மாவட்ட பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஏற்பாட்டில்; இடம்பெற்ற ஒன்றிணைந்த பிரார்த்தனை மற்றும் நினைவேந்தல் நிகழ்வு பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் தலைவி சைமன் வாணி மற்றும் திட்ட இணைப்பாளர் வாணி திட்ட உத்தியோகத்தர் சுமந்தி உள்ளிட்டவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

மதத்தலைவர்களின் நினைவேந்தல் உரை மற்றும் மத அனுஸ்டானங்களுடன் ஆரம்பமான நிகழ்வில் இடம்பெற்ற மனிதநேயமற்ற செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் நமது நாட்டில் இதுபோன்ற துரதிஸ்ட சம்பவங்கள் இடம்பெறாது பாதுகாக்க அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டது.

தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகள் நடைபெற்றதுடன் மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வுகளில் சர்வமத தலைவர்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *