Latest News
Home / வாழ்வியல் / இளநீரின் நன்மைகள் : எந்த நேரங்களில் இளநீரை குடித்தால் உடல் எடை குறையும் என்று தெரியுமா?

இளநீரின் நன்மைகள் : எந்த நேரங்களில் இளநீரை குடித்தால் உடல் எடை குறையும் என்று தெரியுமா?

இயற்கை பானமான இளநீர் பல்வேறு சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், விட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் குறைவான கலோரிகள் இருக்கின்றன.

இந்த இளநீரை வெட்டியதும் குடிக்க வேண்டும். இதை பழச்சாறுகளுடன் சேர்த்து கூட குடிக்கலாம். ஆனால் இளநீருடன் சர்க்கரை அல்லது செயற்கை சுவையூட்டிகள் எதையும் சேர்த்துக் குடிக்கவே கூடாது.

இளநீரின் நன்மைகள் பற்றி பார்ப்போம் : இளநீரை அருந்தும்போது வெறும் நீரை மட்டும் குடிக்காமல் அதன் வழுக்கையையும் சேர்த்து உண்ண வேண்டும். இளநீரின் சத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்கவேண்டுமெனில் வழுக்கையோடு சேர்த்து குடிக்க வேண்டும்.

இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றது. உதாரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, சருமத்தை பளபளக்கச் செய்யும்.

வைட்டமின்கள், உடல் எடையைக் குறைக்கக்கூடிய ஆற்றல் சத்துகள் போன்றவை அதிகமாக இருக்கின்றது. வெளிநாடுகளிலும் இளநீரை அருந்தியபின் வழுக்கையை உணவுபோல் சாப்பிகிறார்கள். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்களும் இந்த முறையையே பின்பற்றப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகள் இளநீர் அருந்தலாமா? என்ற கேள்விக்கு “ தாராளமாக அருந்தலாம். ஆனால், அவர்கள் தங்களின் உணவு முறையில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் பிரச்னை இல்லை.

 

அவர்கள் இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து உண்ணும்போது இரத்தத்தில் உள்ள குளுகோஸைக் கட்டுப்படுத்தும். இது சர்க்கரையை விட ஆபத்து இல்லை. குறிப்பாக செவ்விளநீர் அருந்துவது இன்னும் நல்லது.

இளநீர் தாகத்தைத் தணிப்பதோடு, ஒருவருக்கு நீண்ட நேரம் பசி எடுக்காமல், பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவுகின்றது.

செரிமானத்தை மேம்படுத்தி, உடல் வறட்சி அடையாமல் பாதுகாத்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றன. இளநீர் கெட்ட கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி வெளியேற்றி, உடல் எடை குறைய உதவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இளநீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை மேம்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தை குறைக்கின்றன.

இளநீரை எப்போது குடிக்க வேண்டும்? : உடற்பயிற்சிக்கு பின் குடிக்கலாம். அதிகாலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

மதிய உணவு அல்லது மதிய உணவிற்கு பின் குடிக்கலாம். ஒரு நாளைக்கு 1-2-க்கு மேல் இளநீரைக் குடிக்கக் கூடாது. ஏனெனில் அது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். உடல் எடையும் குறையாது.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *