Latest News
Home / இலங்கை / இலங்கை மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறிய கொரோனா நோயாளி வெளிப்படுத்திய தகவல்!!

இலங்கை மக்களுக்கு பெரும் ஆபத்தாக மாறிய கொரோனா நோயாளி வெளிப்படுத்திய தகவல்!!

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதியானவர் ஒருவர் தனது நிலை தொடர்பில் சர்வதேச ஊடகத்திடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரசாத் தினேஷ் என்ற 33 வயதுடைய இளைஞனே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர் இலங்கையின் 206வது கொரோனா நோயாளியாகும்.

தினேஷிற்கு கொரோனா தொற்று உறுதியாகியவுடன் கடற்படையினர் அவரது கிராமத்தை சுற்றிவளைத்ததுடன், அவருடன் தொடர்புடடையவர்களை தனிமைப்படுத்த முயற்சித்தனர்.

அத்துடன் தினேஷினால் 1100 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக அதிகாரிகள் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

அரச அதிகாரிகள் அவரை 206 நோயாளி என்றே குறிப்பிட்டு ஊடகங்களில் குற்றம் சாட்டியிருந்தனர். அவரால் 3 கொரோனா தொத்துக்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த நோயாளி அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து, கொழும்பில் இருந்து 19 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ஜாஎல பகுதியில் கொரோனா நோயாளிகளை கண்டுபிடிக்கப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 900 கடற்படையினர் கொரோனா தொற்றுக்குள்ளாகினார்கள்.

எப்படியிருப்பினும், இலங்கையில் ஒரு குற்றமாகக் கருதப்படும் போதைப் பழக்கம் அவரை ஒரு பலிக்கடாவாக்கியதாக தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாத காலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பியவர் சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போது இவ்வாறு கூறியுள்ளார்.

கடற்படையினர் உட்பட இத்தனை பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதன் பொறுப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

தொற்றுநோய் இலங்கையில் பரவுவதற்கு முன்னர், நாட்டை முழுவதுமாக மூட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முச்சக்கர வண்டி சாரதியான தினேஷினால் ஒரு வேலையை தேடிக் கொள்ள முடியாமல் போயுள்ளது.

206வது நோயாளியான அவருக்கு ஒருவரும் வேலை வழங்கவில்லை. தென்கொரியாவின் 31வது நோயாளியுடன் அவரை ஒப்பிட்டுள்ளனர்.

அவரால் நாட்டிற்கு பாரிய ஆபத்து ஏற்பட்டு விட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டிருந்தார்.

ஏப்ரல் 5ஆம் திகதி ஒரு கொள்ளை சம்பவத்தின் போது அதிகாரிகள் தினேஷை கைது செய்ததாகவும், இதன் போது அவரது காலி காயம் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காயத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தன் மீது அரச அதிகாரிகள் வீன் பழி சுமத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தான் போதை பொருளுக்கு அ டிமையானவன் அல்ல. போதை பொருள் அருந்தும் போதிலும் அதற்குள் அடிமையாகவில்லை என அவர் கூறியுள்ளார்.

நான் எனது பிள்ளைகளுக்காகவே வாழ்கின்றேன். என் மீது போலி குற்றச்சாட்டு சுமத்தி எனக்கு அச்சத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.

நான் இரண்டு வாரங்களில் சாதாரண நிலைமைக்கு திரும்பிவிட்டேன். நான் போதை பொருளுக்கு அடிமையாக இருந்தால் என்னால் அவ்வளவு இலகுவாக கொரோனாவில் இருந்து மீண்டிருக்க முடியாது.

கொரோனாவின் பின்னர் நான் போதை பொருள் பாவனையை முழுமையாக நிறுத்தி விட்டேன். எனது பிள்ளைகள் இருவரை பார்த்துக் கொள்ளவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *