Latest News
Home / விளையாட்டு / இலங்கைக் கிரிக்கெட் சபையில் ‘சனத் ஜயசூரியவுக்கு‘ முக்கிய பதவி!

இலங்கைக் கிரிக்கெட் சபையில் ‘சனத் ஜயசூரியவுக்கு‘ முக்கிய பதவி!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் தொழில்நுட்ப மத்திய நிலையத்தின் கீழ் உள்ள அனைத்து அணிகளையும் சனத் ஜயசூரிய மேற்பார்வை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத் ஜயசூரிய இதற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவின் தலைவராகவும் தேசிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு அமைச்சரவை உபகுழுவின் கோரிக்கை

இலங்கை கிரிக்கட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கஞ்சன …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *