Latest News
Home / வாழ்வியல் / இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா?

இரவில் படுக்கும் முன் பற்களை துலக்கினால் என்னவாகும் தெரியுமா?

காலையில் எழுந்ததும் பற்களைத் துலக்குவோம். ஆனால் எத்தனை பேர் இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவார்கள்?

இரவில் பற்களைத் துலக்குவோரின் எண்ணிக்கையைப் பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும். இங்கு இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

இரவில் படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாயில் பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படுவதோடு, பற்கள் சொத்தையாகும் அபாயமும் குறையும். ஆகவே உங்கள் பற்கள் சொத்தையாகாமல் இருக்க வேண்டுமானால், இரவிலும் பற்களைத் துலக்குங்கள்.

தினமும் காலையிலும், இரவிலும் பற்களைத் துலக்குவதால், வாய் ஆரோக்கியம் மேம்படுவதோடு, ஈறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயமும் குறையும். ஏனெனில் இரவில் பற்களைத் துலக்கும் போது, பற்காறைகள் அகன்று, ஈறுகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டு, ஈறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

இரவில் பற்களைத் துலக்காமல் இருந்தால், காலையில் வாய் மிகுந்த துர்நாற்றத்துடன் இருக்கும். இவை அனைத்திற்கும் உண்ட உணவுகள் பற்களின் இடுக்குகளில் தங்கி, பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்திருப்பது தான். எனவே தவறாமல் பற்களைத் துலக்குங்கள்.

படுக்கும் முன் பற்களைத் துலக்குவதால், வாய் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

வாய் ஆரோக்கியம் இதய ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்டது. ஒருவரது வாய் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், ப்ளேக் உருவாக்கத்திற்கு காரணமான பாக்டீரியாக்கள் இரத்த நாளங்களில் நுழைந்து, தமனிகளை பாதிக்கும். இதன் முடிவாக இதய நோயின் அபாயமும் அதிகரிக்கும்.

Check Also

சிவப்பு அரிசி சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள்…

பொதுவாக உடல்நலத்தைப் பாதுகாக்கவும் நோய்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வெள்ளையாக இருக்கும் பொருள்களை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *