Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் அமைதியான முறையில் தீபாவளியினை கொண்டாட ஆயத்தம்

ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் அமைதியான முறையில் தீபாவளியினை கொண்டாட ஆயத்தம்

வி.சுகிர்தகுமார்  

  உலகவாழ் இந்து மக்களால் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையினை இம்முறை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் கொண்டாட இலங்கை வாழ் இந்து மக்களும் தயாராகி வருகின்றனர்.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச மக்களும் தீபாவளியினை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

நரகாசுரன் எனும்  மகா கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் வதம் செய்து அழித்தொழித்த பெருமைக்குரிய இத்திருநாளில் வேற்றுமை அகன்று நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் எனவும் கொரோனா எனும் கொடிய அரக்கன் நம் நாட்டில் இருந்து அழிந்து போகவேண்டும் எனவும் பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேசத்திலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான ஆடைகள் மற்றும் அத்தியவாசிய பொருட்களை சந்தையில் கொள்வனவு செய்யும் மக்கள் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர்.
இதேநேரம் நாட்டில் பல்வேறு சிக்கல் நிலை இருந்தபோதும் சந்தையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமையும் அம்பாரை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் மக்கள் தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட மக்கள் ஆயத்தமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *