Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கவிதை பயிற்சிப்பட்டறை

ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கவிதை பயிற்சிப்பட்டறை

வி.சுகிர்தகுமார்  

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாணவர்களுக்கான கவிதை பயிற்சிப்பட்டறை பிரதேச செயலக கலாசார இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் பிரதேச செயலாளருமான வி.பபாகரன் தலைமையில் இடம்பெற்ற கவிதை பயிற்சி பட்டறை நிகழ்வில் மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜௌபர் ஒருக்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், எழுத்தாளர் உமாவரதராஜன் கலாசார பேரைவயின் உபதலைவர் ஆர்.ரெத்தினவேல் கவிஞர் க.தவராசா கலாசார உத்தியோகத்தர்களான நிசாந்தினி தேவராஜ் மற்றும் மோகனதாஸ் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அதிதிகள் வரவேற்க்கப்பட்டதுடன் மாணவர்களால் தமிழ்மொழி வாழ்த்துப்பா பாடப்பட்டது. தொடர்ந்து பிரதேச செயலாளரின் தலைமை உரையோடு ஆரம்பமான பயிற்சிப்பட்டறையில் அதிதிகளின் உரை இடம்பெற்றது.

இதன் பின்னராக வளவாளர்களாக கலந்து கொண்ட உமா வரதராஜன் மற்றும் க.தவராசா ஆர்.இரத்தினவேல் உள்ளிட்டவர்களினால் கவிதை பயிற்சிப்பட்டறை ஆரம்பிக்கப்பட்டது.

மாணவர்களிடையே மருவி வரும் கவிதை மற்றும் சிறுகதை எழுதுதல் போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இடம்பெற்ற பயிற்சிப்பட்டறையில் மாணவர்களால் உடன் எழுதப்பட்ட கவிதைகளும் வாசிக்கப்பட்டதுடன் அதில் மாற்றம் செய்யப்படவேண்டிய முறைமைகள் தொடர்பிலும் அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

நிறைவாக கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பிரதம அதிதி உள்ளிட்டவர்களினால் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *