Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம் கொடையாளர்களுக்கு அழைப்பு….

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரினால் இரத்த தான முகாம் கொடையாளர்களுக்கு அழைப்பு….

 

ஆலையடிவேம்பு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளனர்.

இதற்கு குறைந்தது 100 கொடையாளர்கள் தேவைப்படுவதால், இம்முகாமில் கலந்துகோள்ள விரும்புபவர்கள் கீழ் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தங்களது பெயரை அனுப்பி வைப்பதன் மூலம் பதிவு செய்து கோள்ளலாம்.

இரத்த தானம் தொடர்பான திகதி, இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும்.

இரத்த தானம் செய்தால் ஏற்படும் நன்மைகள்.

1. புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.

2. இலவசமாக குருதிப் பரிசோதனை செய்யப்பட்டு நோய்நிலைமைகள் அறியத்தரப்படுவதனால் பல நோய்களை முனகூட்டியே தடுக்கலாம்.

3. உடலின் மேலதிக கலோரிகள் குறைவடையும்.

4. இதயம் மற்றும் ஏனைய அங்கங்களின் நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவடையும்.

5. மன அழுத்தம் குறைவடையும்.

6. நீங்கள் வழங்கும் இரத்தம் ஓர் நாள் உங்களுக்கோ உங்கள் அன்புக்குரியவர்களுக்கோ பயன்படலாம்.

அத்தோடு உங்களால் 4 உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

இரத்ததானம் செய்வதற்கான தகைமைகள்

1. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
2. உடல் எடை 50ற்கு மேற்பட்டவர்கள்.
3. இறுதியாக இரத்ததானம் செய்து 4 மாதங்கள் கடந்தவர்கள்.
4. கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வேறு நோய்கள் கொண்டவர்கள் பங்குபற்ற முடியாது.
5. பாலியல் நோய்கள் கொண்டவராக இல்லாதிருத்தல்.

எனவே மேலுள்ள தகைமைகளைக் கொண்டோர் இரத்த தானம் செய்து பல உயிர்களை காப்பாற்ற விரும்புபவர்கள் கீழ்க்கண்ட இலக்கங்களுக்கு sms,whatsapp, அல்லது எமது பக்கத்திற்கு messenger மூலம் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும்.

உரியவர்களுக்கும் அறியத்தரவும்.
0770131047
0768887835
0750582429

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *