Latest News
Home / உலகம் / அழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்

அழிவுகளுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் பிரேசில் ஜனாதிபதியின் தீர்மானம்

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரேசில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் தீர்மானம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்புகளில் இரண்டாம் நிலையில் இருக்கும் பிரேசிலில் விதிக்கப்பட்டிருக்கும் முகக் கவசம் தொடர்பான விதிமுறைகளை தளர்த்தி அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ (Jair Bolsonaro) உத்தரவிட்டுள்ளார்.

மேலும் முகக்கவசம் குறித்தான கட்டுப்பாட்டினை தளர்த்தும் தீர்மானத்துக்கு, அவர் தனக்கான வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பிரேசில் மக்கள் பொதுவெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையில், கடைகள் மற்றும் மத வழிபாட்டுத் தளங்களில் குறித்த நடைமுறை பின்பற்றப்படத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லத்தின் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 64 ஆயிரத்து 350க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 15 இலட்சத்து 78 ஆயிரத்து 375குமதிக்கமானவர்கள் தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில், குறித்த தீர்மானம் சர்வதேச ரீதியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *