Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் இடம்பெறும் வசந்தன் கும்மி (கோலாட்ட) நிகழ்வு இவ்வருடமும் பரிபாலன சபையினரின் சிறப்பு ஏற்பாட்டில்….

அக்கரைப்பற்று ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் இடம்பெறும் வசந்தன் கும்மி (கோலாட்ட) நிகழ்வு இவ்வருடமும் பரிபாலன சபையினரின் சிறப்பு ஏற்பாட்டில்….

அக்கரைப்பற்று ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் இடம்பெறும்
சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றானதும் இற்றைக்கு ஏறத்தாழ 50 வருடங்களுக்கு முற்பட்டதும்
எமது பகுதிக்கான பாரம்பரிய நிகழ்வுகளில் ஒன்றான வசந்தன் கும்மி (கோலாட்ட) இவ்வாண்டுக்கான நிகழ்வு நேற்று (15.04.2022) ஆலயத்தில் சிறப்பு பூசைகளுடன் ஆரம்பமாகி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், ஸ்ரீ வீரம்மாகாளி அம்மன் ஆலயங்களில் இடம்பெற்றது.

இவ் கோலாட்ட பாரம்பரிய கலை நிகழ்வு எம்மை வந்தடைவதற்கு காரணகர்த்தாவாக அமைந்த
முன்னோர்களை நினைவு கூர்ந்ததுடன், இக் கோலாட்ட கலை நிகழ்வு எமது பகுதியில் தொடர்ந்து இடம்பெற காரணமாக அமைகின்ற தற்காலத்தில் அண்ணாவியார் பரம்பரை வழி வந்த திரு. கணபதிப்பிள்ளை ஐயா அவர்கள் ஆலய பரிபாலன சபையினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன்.

மேலும் இவ் வருட கோலாட்டத்தில் பங்கேற்ற சிறுவர்களுக்கும் அதனை வழி நடாத்திய அண்ணாவிமார் பரம்பரை வழிவந்தவர்களுக்குமான கௌரவிப்பும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று ஸ்ரீ மஹா பெரியதம்பிரான் சுவாமி ஆலய முன்றலில் ஆலய பரிபாலன சபையினரினால் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *