Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA premier league – 2023” கோலாகலமான ஆரம்ப நிகழ்வு….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA premier league – 2023” கோலாகலமான ஆரம்ப நிகழ்வு….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் 08 அணிகள் கொண்ட YMHA premier league 2023 (பிரிமியர் லீக்) கிரிக்கட் சுற்றுத்தொடர் இன்று (15) காலை 09.00 மணியளவில் அக்கரைப்பற்று, தர்மசக்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மற்றும் விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன்.

நிகழ்வில் அதிதிகள், அனுசரணையாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த ”YMHA premier league – 2023” கிரிக்கட் சுற்றுத்தொடரில் இன்றைய தினத்தில் 07 போட்டிகள் இடம்பெற இருப்பதுடன், மீதமுள்ள போட்டிகள் நாளைய தினம் இடம்பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ”YMHA premier league – 2023” கிரிக்கட் சுற்றுத்தொடர் அக்கரைப்பற்று, விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழா எதிர்வரும் 29 ஆம் இடம்பெற இருக்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட பாடசாலைகளில் ”பசுமை மீட்சிப் போராட்டம்” மின்மினி மின்ஹா இன் விழிப்புணர்வு பிரச்சாரம்….

பசுமை மீட்சிப் போராட்டம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்களை பசுமை மீட்சி மற்றும் சூழல் மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *