Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA premier league 2023” அறிமுக நிகழ்வு….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA premier league 2023” அறிமுக நிகழ்வு….

அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் 08 அணிகள் கொண்ட YMHA premier league 2023 (பிரிமியர் லீக்) கிரிக்கட் சுற்றுத்தொடர் அடுத்த வாரம் 15, 16 ஆகிய தினங்களில் அக்கரைப்பற்று, தர்மசக்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் YMHA premier league -2023 கிரிக்கட் சுற்றுத்தொடர் நடாத்தப்படுவது தொடர்பாக அறிமுக நிகழ்வு மற்றும் கருத்துக்கள் பரிமாற்ற நிகழ்வு நேற்றய தினம் (06) இரவு 07.00 மணியளவில் விபுலானந்தா சிறுவர் அபிவிருத்தி நிலைய ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் மற்றும் விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன். YMHA premier league -2023 கிரிக்கட் சுற்றுத்தொடருக்கு அனுசரணை வழங்க இருக்கின்ற சில அனுசரணையாளர்கள், பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் YMHA premier league -2023 போட்டிகளில் கலந்து கொள்கின்ற 08 அணிகளின் பெயர் விபரங்கள், போட்டியின் விதிமுறைகள் மற்றும் போட்டியின் நடைமுறைகள் பற்றியும் விரிவான முறையில் தெளிவுபடுத்தல்களும், இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை அவர்களினால் கழகங்களின் செயலாளர்களிடம் சுற்றுப்போட்டி தொடர்பான ஒப்பந்தங்களும் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் குறித்த ”YMHA premier league – 2023” கிரிக்கட் சுற்றுத்தொடர் அக்கரைப்பற்று, விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் முத்து விழா எதிர்வரும் 29 ஆம் இடம்பெற இருக்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Check Also

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து வழங்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14 அன்று….

தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இலங்கை முன்னணி இசைக் கலைஞர்களுடன் Rhythm’s with VIP இணைந்து எதிர்வரும் 2024.04.14 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *