Latest News
Home / இலங்கை / சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கல்

சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் அமைப்பினால் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டிங்கீழ் வாழ்கின்ற குடும்பங்களுக்கான பொருளாதார நிவாரண உதவிகளை சேவா இன்டர்நேஸனல் பவுண்டேஸன் முன்னேடுத்து வருகின்றது.

மேலும் அம்பாரை மாவட்டத்தில் அறப்பணி செயற்திட்டங்களை மற்றும் முன்பள்ளி நிலையங்களையும் முன்னெடுத்து வரும் வேளையில் ஆறுமுக நாவலர் அறப்பணி திட்டத்தின் ஊடாக அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலக தம்பிலுவில் 06 கிராம சேவக பிரிவுகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு செயற்பாடாக அம்பாரை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட தம்பிலுவில் 06 கிராம சேவையாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான பெறுமதியான உலர் உணவுகள் வழங்கிவைக்கப்பட்டன
இன் நிகழ்வானது திருநாவுக்கரசு நாயனார் குருகுல பணிப்பாளர் திரு.க. ராஜரெட்ணம் தலைமையில் 04/12/2022 அன்று பி.ப.4.00 மணியளவில் தம்பிலுவில் பொன் வள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அதிதிகளாக தம்பிலுவில் சித்தி விநாயகர் ஆலய வண்ணக்கர் திரு.செல்வராசா, பொன் வள்ளி அமைப்பின் செயலாளர் திருமதி.வி. விஜேந்திரகுமார்,திரு. கோ.கோகுலமுர்த்தி, திரு. எஸ். காந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அம்பாரை மாவட்ட இந்து ஸ்வயம் சேவக சங்க செயலாளர் வராதராஜன், உறுப்பினர்களான மனோபவன், தஜிதன், துலக்சன் ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு சுமார் 11,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *