Latest News
Home / ஆலையடிவேம்பு / கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திற்கு “கைகொடுப்போம் அறக்கட்டளை” அனுசரணையில் CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு….

கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்திற்கு “கைகொடுப்போம் அறக்கட்டளை” அனுசரணையில் CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு கல்வி கோட்ட கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபர் திருமதி.உ.இராசநாதன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக “கைகொடுப்போம் அறக்கட்டளை” அவர்களின் பூரண அனுசரணையில் பாடசாலை பகுதியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக CCTV இணைப்பினை நிறுவி அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு (2022.11.22) இன்று செய்வாய்க்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

அண்மைக்காலமாக பாடசாலைகளில் மாணவர்களின் எதிர்காலத்தினை
சவாலுக்குட்படுத்தியதாக சிறுவர் துஸ்பிரயோகங்கள், போதைவஸ்து தாக்கங்கள், பிறழ்வான நடத்தைகள் போன்ற சில சம்பவங்கள் இடம் பெற்று வருவதினை அறியக்கூடியதாக இருக்கின்றது.

அவ்வாறான சம்பவங்களை பாசாலை மட்டத்தில் குறைத்து முற்பாதுகாப்பினை ஏற்படுத்தும் முகமாக கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலய அதிபரான திருமதி.உ.இராசநாதன் அவர்களினால் CCTV இணைப்பின் தேவையினை உணர்த்தியதற்கமைவாக, பழைய மாணவரான ஜெகன் அவர்களின் பங்களிப்புடனும், கோளாவில்-03 இல் இயங்கிக் கொண்டிருக்கின்ற “கைகொடுப்போம் அறக்கட்டளை” அவர்களின் பூரண அனுசரணையில் குறித்த உதவியானது செய்து கொடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கைகொடுப்போம் அறக்கட்டளையின் சார்பாக செம்பன் முருகன் அவர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர், மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கமு/திகோ/கோளாவில் பெருநாவலர் வித்தியாலயம் 1900 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது 123 வது ஆண்டில் காலடி எடுத்துவைக்கும் நிலையிலுள்ளதும், இதில் தரம்-01 தொடக்கம் தரம்-05 வரை சுமார் 110 மாணவர்கள் கல்விகற்றும் வருகின்றனர்.

குறித்த பாடசாலையானது அக்கரைப்பற்று பிராந்தியத்தில் தேன்றிய முதலாவது பாடசாலை என்ற தனிச்சிறப்பும் கொண்ட பாடசாலையாகும்.

Check Also

SRK விஞ்ஞான கழகம் நடாத்திய இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா- 2024

அக்கரைப்பற்று, கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி (தேசிய பாடசாலை) 02/04/2024 இன்றையதினம் ‘இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா’ விஞ்ஞான ஆய்வு கூடத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *