Latest News
Home / இலங்கை

இலங்கை

சிவ தொண்டர் அமைப்பினால் கடந்த வருடம் 2023 கதிர்காம பாதயாத்திரைக்காக குடிநீர் வழங்கல் செயற்பாட்டிற்கு உதவிகளை வழங்கியவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு….

அம்பாறை மாவட்ட சிவ தொண்டர் அமைப்பினால் கடந்த வருடம் 2023 கதிர்காம பாதயாத்திரைக்காக குடிநீர் வழங்கல் செயற்பாட்டிற்கு முன்வந்து உழவு இயந்திரங்கள், வாகனங்கள், அமைப்பு சீருடை, நீர்த்தாங்கிகள் வழங்கியவர்களின் சேவையைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு தம்பிலுவில் சிவ தொண்டர் அமைப்பு காரியாலயத்தில் நேற்று (26) இடம்பெற்றது. மேலும் குறித்த நிகழ்வில் சேவை செய்த அமைப்பு தொண்டர்கள், உதவிகள் செய்து வரும் நபர்களின் சேவையும் பாராட்டி கௌரவித்ததுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. நிகழ்வுகள் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” விழிப்பூட்டல் கருத்தரங்கு…..

அக்கரைப்பற்று, இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் “வெற்றிக்கான நெறியாள்கை” எனும் தலைப்பில் அண்மையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள க.பொ.த உயர் தரம் மற்றும் க.பொ.த சாதாரண தரம் கற்கும் மாணவர்களுக்காக பரீட்சைக்கு எவ்வாறு தயாராக வேண்டும் என்பது சம்பந்தமான ஓர் விழிப்பூட்டல் கருத்தரங்கு இன்று (08) நடைபெற்றது. கருத்தரங்கு பாடசாலையின் அதிபர் திருமதி ரவிலேகா நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்றதுடன். நிகழ்வில் பிரபல மருத்துவத்துறை பேராசிரியர் கலாநிதி மார்க்கண்டு திருக்குமார் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார். …

மேலும் வாசிக்க

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களுடைய 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது 27/03/2024 பாடசாலையின் அதிபர் ச. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. கல்விற்க்கு வறுமை தடையாக இருக்க கூடாது என்று “எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் தொனிப்பொருளில் …

மேலும் வாசிக்க

மரதன் ஓடிய திருக்கோவில் மாணவன் மரணம்: போராட்டத்தை முன்னெடுத்துள்ள பொதுமக்கள்! விபரம்

அம்பாறை மாவட்ட, திருக்கோவில் பகுதியில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குபற்றிய 16 வயதுடைய மாணவரொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குறித்த சம்பவம் இன்று (11) திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை இல்ல மரதன் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்ட குறித்த மாணவன் போட்டி நிறைவுற்றதும் வகுப்பறைக்கு சென்றுள்ளார். இதன்போது வயிற்றுக்குள் கொழுவி பிடிப்பதாகக் கூறி திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றதாகவும் பின்னர் அவசர சிகிச்சை பிரிவில் …

மேலும் வாசிக்க

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த விலைமனு அழைப்பை 45 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செலுத்த வேண்டிய 510 மில்லியன் டொலர் கடனை அரசாங்கம் பொறுப்பேற்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் …

மேலும் வாசிக்க

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக …

மேலும் வாசிக்க

அதிகரிக்கப்பட்ட உணவுப்பொருட்களின் விலைகள்!

இன்று (02) நள்ளிரவு முதல் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான், ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார். உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிளேன்டி ஒன்றின் விலை 5 ரூபாவினாலும், பால் தேனீர் …

மேலும் வாசிக்க

பரீட்சைத் திணைக்களம் விசேட அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாடசாலை பரீட்சைகள் மற்றும் அவற்றின் திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2024ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் மே மாதம் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2024 செப்டம்பர் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை …

மேலும் வாசிக்க

கைப்பேசி பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பதிரண  இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் தற்போது பயன்படுத்தாத தொலைபேசி நிறுவனங்களில், உங்கள் பெயரில் உள்ள சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க தொலைபேசி நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேபோல், உங்கள் …

மேலும் வாசிக்க

மட்டக்களப்பில் கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு

மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து வெளிமாவட்ட வியாபாரிகள் கள்ளத் தராசினைப் பயன்படுத்தி நெல் கொள்வனவில் ஈடுபட்டுவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட அளவீட்டு திணைக்கள பணிப்பாளர் வி.விக்கினேஸ்வரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே 8 வியாபாரிகள் குறித்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை …

மேலும் வாசிக்க