Latest News
Home / இலங்கை / முதலாவது காலாண்டு இலாபம் – இலங்கை வங்கி சாதனை!

முதலாவது காலாண்டு இலாபம் – இலங்கை வங்கி சாதனை!

இலங்கை வங்கி இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை முதலாவது காலாண்டிற்குள் அதன் வரலாற்றில் அதிக வரியற்ற இலாபமாக 19,656 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை பாராளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

இலங்கை வங்கி இந்த வருடம் ஏப்ரல் 30ஆம் திகதி வரை முதலாவது காலாண்டிற்குள் 19,656 மில்லியன் வரியற்ற இலாபத்தை ஈட்டியுள்ளமை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அண்மையில் (30) நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.

இதனுடன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டு இந்த வங்கி 29,685 மில்லியன் ரூபாவை வருடாந்த இலாபமாக ஈட்டிருப்பதுடன், 2020 ஆம் ஆண்டு வருடாந்த இலாபமாக 23,552 மில்லியன் ரூபா ஈட்டியிருப்பதாக நிதி அமைச்சினால் 2021 நடுப்பகுதிவரையான காலப்பகுதிக்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டபோது புலப்பட்டது.

கொவிட் 19 சூழலுக்கு மத்தியில் அரசாங்க வங்கி ஒன்றினால் இவ்வாறு இலாபம் ஈட்ட முடிந்தமை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் பாராட்டப்பட்டதுடன், உலகளாவிய ரீதியில் சிக்கலான சூழலுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் தமது வாடிக்கையாளர்கள் கஷ்டத்துக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்க முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

2003 ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்பு) (திருத்தச்) சட்டத்தின் 10வது சரத்திற்கு அமைவாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை ஊடாக நாட்டின் பொருளாதார சூழல், அரசாங்கத்தின் நிதி அதிகாரம், அரசுடமை நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் வெளிநாட்டு நிதியளித்தல் போன்றவற்றின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை விரிவாக விளங்கப்படுத்துவது நிதி அமைச்சின் ஊடாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், 2002ஆம் ஆண்டு 14ஆம் இலக்க பெறுமதி சேர் வரி சட்டத்துக்கு அமைய அரசாங்கத்தினால் 2017.10.26 ஆம் திகதி 1 ஆம் இலக்க 2042/21 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை திருத்துவதற்கான முன்வைக்கப்பட்டுள்ள 2228/833 மற்றும் 2021.02.20 திகதி வர்த்தமானி அறிவித்தலுக்கும் இக்குழு அனுமதி வழங்கியது.

ஒன்லைன் முறையின் கீழ் நடத்தப்பட்ட அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிக்கல, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்நோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனேத்ரா குணவர்த்தன உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, கலாநிதி நாளக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, குமார வெல்கம ஆகியோர்

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *