Latest News
Home / Uncategorised / மாகாண மட்ட பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் 02 ஆம் இடத்தினைபெற்று திருக்கோவில் கல்வி வலயம் சாதனை!முழுமை விபரம்!

மாகாண மட்ட பாடசாலை மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டிகளில் 02 ஆம் இடத்தினைபெற்று திருக்கோவில் கல்வி வலயம் சாதனை!முழுமை விபரம்!

கந்தளாய் லீலாரெத்தின விளையாட்டுமைதானத்தில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் திருக்கோவில் கல்வி வலயம் 13 தங்கம் 05 வெள்ளி 06 வெண்கலப்பதக்கங்களைப் பெற்று கிழக்கின் 17 வலயங்களிடையே இரண்டாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இதில் பாடசாலைகள் பெற்ற பதக்க விபரம்.

திகோ/தாண்டியடி விக்னேஸ்வரா மகா.வித்தியாலயம் ( 08 தங்கம் 03வெள்ளி 01 வெண்கலம்)

திகோ/ விநாயகபுரம் மகா வித்தியாலயம் ( 03 தங்கம் 01வெண்கலம்)

திகோ/ ஸ்ரீ இராம கிருஸ்னா கல்லாரி (01 தங்கம் 01 வெள்ளி 02 வெண்கலம்)

திகோ/ திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயம் ( 01 தங்கம் 01 வெள்ளி 02 வெண்கலம்) பெற்று வலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றிபெற்ற மாணவர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், ஆசிரிய ஆலோசகர் திரு. G. ரொபின் சம்சன், உடற்கல்விப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளரும் கல்வி நிருவாகத்திற்குரிய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான திரு. K. கங்காதரன் என சம்மந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

Check Also

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் பொங்கல் விழா கொண்டாட்டமும்….

ஆலையடிவேம்பு கனகாம்பிகை பாலர் பாடசாலையில் 2024ம் ஆண்டிற்கான உழவர் திருநாளை சிறப்பிக்கும் பொங்கல் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *