Latest News
Home / இலங்கை / மல்லிகைத்தீவு கிராமத்தில் இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

மல்லிகைத்தீவு கிராமத்தில் இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் மல்லிகைத்தீவு சது/அரசினர் தமிழ் கழவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது 31/12/2022 காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.செல்வராஜா யதீஸ்வரா தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.

மேலும் இணைந்த கரங்கள் இப்பணியினை இடை விடாது கிராமங்களில் உள்ள இடங்களை அவர்களின் இருப்பிடம் தேடி அவர்களது கல்வியில் அக்கறை காட்டி மாணவர்கள் வறுமையின் காரணமாக மாணவர்கள் பாடசாலையை விட்டு இடை விலகாமல் அவர்களை பாடசாலைக்கு தினமும் சென்று கல்வியை கற்க வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் ஓரு சமூகம் முன்னேற வேண்டுமாயின் கல்வியினாலே மட்டுமே முடியும் என்பதற்காக இணைந்த காரங்கள் நாம் “ஏழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்” எனும் எண்ணக்கருவிற்கு அமைவாக மாணவர்களின் எண்ணங்களில் இதனை விதைத்துள்ளது.

சது/ மல்லிகைத்தீவு வித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் முன்பள்ளி மற்றும் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரை கல்விகற்கும் 22 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இணைந்த கரங்கள் உறவுகளினால் 31/12/2022 இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான திரு.லோ.கஜரூபன், திரு.எஸ்.காந்தன், திரு. சி. துலக்சன் ஆகியோரினால் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் புத்தகப்பைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *