Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

திருக்கோவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!

அக்கரைப்பற்று, திருக்கோவில் பிரதான வீதி தம்பிலுவில் பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (27) மாலை 5.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்  திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த லொறியும் திருக்கோவிலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *