Latest News
Home / ஆலையடிவேம்பு / தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசுபொருள் ஆக்குவது மட்டுமே பொறுப்பல்ல!!!! சாகாம வீதி அபாயத்திற்கு தீர்வு….

தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசுபொருள் ஆக்குவது மட்டுமே பொறுப்பல்ல!!!! சாகாம வீதி அபாயத்திற்கு தீர்வு….

ஆலையடிவேம்பு பிரதேச,சாகாமம் பிரதான வீதி கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக காணப்படுகின்ற பாதசாரி கடவைக்கான சமிக்ஞை பதாதை (Sign board) மற்றும் அதனை அண்மித்ததாக காணப்படும் பகுதிகளிலும் (தீவுக்காலை பகுதியில்) நடப்பட்டுள்ள சாரதிகள் வேகக் கட்டுப்பாட்டு பதாதை என்பன வீதியால் செல்லும் சாரதிகளுக்கு கட்டுப்பாட்டு விதிமுறைகளை காணமுடியா வண்ணம் வீதியில் இருந்து விலகி கடந்த நாட்களாக காணப்பட்டது.

குறித்த விடயம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பராமரிப்பிற்கு சம்மந்தமான அக்கரைப்பற்று பிராந்திய நிர்வாக பொறியாளர் (Executive Engineer) கவனத்திற்கு கொண்டு சென்று இருந்தோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் (30/01/2023) திங்கள்கிழமை குறித்த சமிக்ஞை பதாதைகளை (Sign board) நிபர்த்தி செய்து மீள பொருத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்கள்.

குறித்த பிரதேச மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்ற வீதியாக அமைவதால், மக்களின் மற்றும் பயணிகளின் பாதுகாப்புமிக்க பயணங்களுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக சமிக்ஞை பதாதைகள் காணப்படுவதுடன். மிக கட்டாயமாக சமிஞ்சை பலகைகள் நிறுவி இருப்பது முக்கியம் பெறுகின்றது.

இவ்வாறாக இருக்கின்ற நிலையில் மக்களுக்கு, மாணவர்களுக்கு பாதுகாப்பு அற்றதாக இருந்து வந்த பயணத்தினை நிவர்த்தி செய்த அதிகாரிகளுக்கு பிரதேச மக்கள் சார்பாக நன்றிகள்.

இது தொடர்பான கடந்த செய்திப்பதிவு

சாகாம வீதி ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியின் சமிக்ஞை பதாதைகளின் (Sign board) நிலைகளும்: மாணவர்களின் பாதுகாப்பின் கேள்விக்குறியும் – தீர்வுக்கான நகர்வும்…

 

Check Also

ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம் எதிர்வரும் (04/05/2024) அன்று கோலாகலமாக இடம்பெறும்….

அக்கரைப்பற்று யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகம் நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் பாரம்பரிய சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா நிகழ்வுகள் எதிர்வரும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *