Latest News
Home / இலங்கை / கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா….

கோலாகலமாக நிகழ்ந்தேறிய பசுமை அமைதி விருதுகள் விழா….

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா கோலாகலமாக நிகழ்ந்தேறியுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில் பங்குபற்றுநர்களாக்கும் நோக்குடன் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் பசுமை அமைதி விருதுகளை வழங்கி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான விருதுகளை வழங்கும் விழா யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராகக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் கலந்துகொண்டிருந்தார். சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மீன்பிடியியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் பேராசிரியர் சிவசாந்தினி குகநாதன், வடக்கு மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் ச. சர்வராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

மாணவர்களிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட சூழல் பொதுஅறிவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில் முதல் 100 மாணவர்கள் பசுமை அமைதிச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வெற்றியாளர்களுக்குச் சூழலியல் ஆசான் க.சி. குகதாசன் ஞாபகார்த்தப் பசுமை அமைதி விருதுகள் வழங்கப்பட்டன. முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி மாணவி அபிநயா சிவகரன் தங்கப்பதக்கம் வழங்கியும், இரண்டாம் இடத்தைப் பெற்ற திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவி அம்சனா பேரின்பசிவம் வெள்ளிப்பதக்கம் வழங்கியும், மூன்றாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரி மாணவன் சிவகரன் அபிசாய்ராம் வெண்கலப் பதக்கம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

ஜே.கே.யதுர்ஷன்

 

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *