Latest News
Home / இலங்கை / இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்?

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பால் மாவின் விலை குறைக்கப்பட்டது.  இதற்கமைய 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால் மா பொதி ஒன்றின் விலை 80 ரூபாயால் குறைக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி 1120 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், ஒரு கிலோ பால் மாவின் விலை 3100 ரூபாவிலிருந்து 200 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *