Latest News
Home / விளையாட்டு (page 43)

விளையாட்டு

பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணம் முதற்தடவையாக இலங்கைக்கு!!

6 ஆவது பொலிஸ் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தின் வுஸ்டன் நகரில் இடம்பெற்ற பொலிஸ் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் மேற்கு அவுஸ்திரேலியா பொலிஸ் அணியை வீழ்த்தி இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணி பொலிஸ் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளது. ஆசிய பொலிஸ் கிரிக்கெட் அணி ஒன்று உலக பொலிஸ் கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்தப் …

மேலும் வாசிக்க

227 ஓட்டத்துடன் இலங்கை!

நியூஸிலாந்து அணியுடான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை  அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்றைய தினம் காலியில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று! Lions விளையாட்டு கழகம் champion.(படங்கள் இணைப்பு)

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழக ஆளுமைமிக்க வீரர்களான கவிராஜ், தீசன் அவர்களின் ஏற்பாட்டில் உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஒற்றுமையினை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(14) Lions விளையாட்டு கழகம் jolly boys விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இவ் இறுதிப்போட்டியில் Lions விளையாட்டு கழகம் jolly boys விளையாட்டு கழகத்தினை …

மேலும் வாசிக்க

ஸ்மார்ட் பந்துகளை அறிமுகப்படுத்திய கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனம்

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் பந்து தயாரிப்பு நிறுவனமான கூக்கபுரா மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகளை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மைக்ரோ பொருத்தப்பட்ட ஸ்மார்ட் பந்துகள் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரில் பயன்படுத்தப்படவுள்ளன. இதில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டால், அதன்பின் சர்வதேசப் போட்டிகளுக்கு பரிந்துரைக்கப்படும். இதேவேளை இந்த ஸ்மார்ட் பந்துகள் சோதனை முயற்சியில் இருப்பதால், விரைவில் பிரதான கிரிக்கெட் போட்டிக்குள் வரும்போது, மிகப்பெரிய தாக்கத்தை …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கு வெளிநாட்டு தலைவர்களிற்கான பாதுகாப்பு உண்மையா? பாக்கிஸ்தான்

பாக்கிஸ்தானிற்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பட்சத்தில் வெளிநாட்டு தலைவர்களிற்கு வழங்குகின்ற பாதுகாப்பினை இலங்கை அணிக்கு வழங்குவதற்கு அந்தநாட்டு அதிகாரிகள் முன்வந்துள்ளனர். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் செயலாளர் மொகான் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முழுமையான தகவல்களை அவர்கள் எங்களிற்கு வழங்கினார்கள் அது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்Nளூம் என அவர் தெரிவித்துள்ளார்.   நாங்கள் எங்கள் அறிக்கையை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் நிறைவேற்று …

மேலும் வாசிக்க

இலங்கை ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிய வில்லியம்சன்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் இலங்கை அணியின் ரசிகர்களுடன் தனது 29 ஆவது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந் நிலையில் இன்றைய தினம் கட்டுநாயக்கவில் உள்ள இலங்கை விமானப் படையின் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது …

மேலும் வாசிக்க

மீண்டும் இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள சந்திமல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் நியூசிலாந்துக்கு எதிரான உத்தேச 22 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகின்றது. இதில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள உத்தேச 22 …

மேலும் வாசிக்க

தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து சந்திக ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக ஜெரோம் ஜெயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திக ஹதுருசிங்கவினை பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக, இலங்கை கிரிக்கெட் சபை வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) …

மேலும் வாசிக்க