Latest News
Home / விளையாட்டு (page 39)

விளையாட்டு

பாகிஸ்தானின் கனவை கலைத்த மழை: இன்றைய ஆட்டமும் இரத்து!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டமும் மழைக் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆட்டத்தில் தொடர்ச்சியாக கடும் மழை பெய்ததால், ஒரு பந்துக் கூட வீசாத நிலையில் நான்காம் நாள் ஆட்டம் இரத்து செய்யப்பட்டது. நேற்றைய தினமும் 5.2 ஓவர்கள் வீசிய நிலையில், தொடர்ச்சியாக மழை பெய்ததால் நேற்றைய ஆட்டமும் இரத்து செய்யப்பட்டது. கடந்த 11ஆம் திகதி ராவல்பிண்டியில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய …

மேலும் வாசிக்க

5.2 ஓவர்களுடன் முடிவுக்கு வந்தது இலங்கை – பாகிஸ்தானுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் 3 ஆம் நாள் ஆட்டம்

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் 5.2 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்ட நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக கைவிடப்பட்டது. மூன்றரை மணித்தியாலங்கள் தாமதத்தின் பின்னர் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு (இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணி) தொடர்ந்த மூன்றாம் நாள் ஆட்டம் 27 நிமிடங்கள் விளையாடப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டு தேநீர் இடைவேளைக்குப் பின்னர் …

மேலும் வாசிக்க

ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ரி-20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது ரி-20 உலகக்கிண்ணத்தை முன்னிட்டு ஒவ்வொரு நாடுகளும் ரி-20 தொடர்களை நடத்தி வருகின்றது. இந்த நிலையில், ஐ.சி.சி.யின் ரி-20 துடுப்பாட்ட வீரர்களிளன் புதிய தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியல்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. …

மேலும் வாசிக்க

ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் முதல் முறையாக தமிழில் வர்ணனை: புதிய செய்திகளின் தொகுப்பு

இந்தியாவில் நடைபெறும் ரி-20 கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். தொடரின், 13ஆவது அத்தியாயத்திற்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் தொடர், கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் சிறந்த உள்ளூர் வீரர்களை இனங்காண்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடர், சர்வதேச வீரர்களின் வருகையால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கமைய ஐ.பி.எல். தொடரின், 13ஆவது …

மேலும் வாசிக்க

மழையால் முன்னதாகவே இடை நிறுத்தப்பட்ட பாகிஸ்தான் – இலங்கை ஆட்டம்!

ராவல்பிண்டி, பிண்டி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக முன்னதாகவே இடை நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாள் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு  நிறுத்தப்பட்டபோது இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. தனஞ்சய டி சில்வாவின் அபார அரைச் சதததின் உதவியுடன் இலங்கை வலுவான நிலையில் இருக்கின்றது. போட்டியின் …

மேலும் வாசிக்க

28 வருடத்துக்கு பின் மெய்வல்லுனரினல் சம்பியனான இலங்கை!

நேபாளத்தில் நடைபெற்று வரும் 13ஆவது தெற்காசிய விளைட்டு விழாவில் இதுவரையில் இலங்கை அணி 35 தங்கப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த முறை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 12 ஆது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. ஆனால் இம்முறை மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. எனினும் இதில் விசேட அம்சமொன்னவென்றால் கடந்த முறை ஒட்டுமொத்தமாக இலங்கை அணி 25 தங்கப்பதக்கங்களை மாத்திரமே …

மேலும் வாசிக்க

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: எதிர்பார்ப்பு மிக்க பாகிஸ்தான் அணியில் பவாட் அலாமுக்கு வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும், பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 16பேர் கொண்ட இந்த அணியில், அனுபவ துடுப்பாட்ட வீரரான பவாட் அலாமுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் பெரிதும் அனுபவமில்லாத 34 வயதான பவாட் அலாம், இறுதியாக கடந்த 2009ஆம் ஆண்டு நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார். இறுதியாக 2015ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியிலேயே, அவர் சர்தேச போட்டியொன்றினை சந்தித்திருந்தார். …

மேலும் வாசிக்க

ஸ்மித் முதலிடம், திமுத் ஏழாம் ஆம் இடம்!

சர்வதேச டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 7 ஆவது இடத்தில் உள்ளார். சற்று முன்னர் சர்வதேச ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில்  திமுத் கருணாரத்ன 723 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 931 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணித் தலைவர் விராட் கோலி 928 புள்ளிகளுடன் …

மேலும் வாசிக்க

இருப்பினை தக்க வைத்துக் கொண்ட மலிங்க!

2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் ஏலத்தையொட்டி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பதினொரு வருடங்களாக விளையாடிய இலங்கை அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவை தக்கவைத்துக் கொள்ள அந்த அணி தீர்மானித்துள்ளது. இதேநேரம், நான்கு தடவைகள் ஐ.பி.எல் சம்பியனாகத் தெரிவாகிய மும்பை அணி, இம்முறை தமது அணியில் இருந்து 12 வீரர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்திருப்பதுடன், கடந்த வருடம் அந்த அணிக்கு சம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பதற்கு காரணமாக …

மேலும் வாசிக்க

இந்தியா, பங்களாதேஷ் முதல் டெஸ்ட் நாளை – பகலிரவுப்போட்டிக்கும் கடும் பயிற்சி

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை இந்தூரில் ஆரம்பிக்கின்றது. இந்தத் தொடரின் இரண்டாவது போட்டி, எதிர்வரும் 22 ஆம் திகதி கொல்கத்தாவில் பகலிரவாக இடம்பெறவுள்ளது. இந்திய அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் இது வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றது. இதற்கென இந்திய வீரர்கள் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். முதல் டெஸ்டிற்கும் இரண்டாவது டெஸ்டிற்கும் இடையிலான …

மேலும் வாசிக்க