Latest News
Home / விளையாட்டு (page 42)

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர்களை இந்தியா மிரட்டியதாக பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்கள் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, விளையாட மறுப்பு தெரிவித்ததற்கு, இந்தியா மிரட்டியதே காரணம் என பாகிஸ்தான் அமைச்சர் ஹம்சா அமீர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பத்து வீரர்கள், பாகிஸ்தான் அணியுடனான தொடரை புறக்கணித்துள்ளனர். இரு அணிகளுக்கிடையிலான இத்தொடர் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றால், பாகிஸ்தான் மீதான தீவிரவாத அச்சம் துடைக்கப்படும், மீண்டும் பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெறும் …

மேலும் வாசிக்க

விக்கெட்டுக்களை அள்ளிய மலிங்க ; 37 ஓட்டத்தால் இலங்கை திரில் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி திரில் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இலங்கை கிரிக்கெட் அணியுடன் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு – 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிய மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரை நியூஸிலந்து அணி 2:0 …

மேலும் வாசிக்க

தொடர்ச்சியான 4 விக்கெட்டுக்களுடன் 100 விக்கெட்டுக்களை தாண்டிய மலிங்க

நிஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் லசித் மலிங்க 100 விக்கெட்டுக்களை எடுத்து சாதனை படைத்தது மாத்திரமல்லாது ஹெட்ரிக் சாதனையையும், தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்களையும் சாய்த்து தள்ளியுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் மூன்றாவது இருபதுக்கு – 20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 125 ஓட்டங்களை குவித்தது. 126 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வந்த …

மேலும் வாசிக்க

மூன்றாவது 20:20 போட்டியில் செஹான், குசல் நீக்கம்!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் செஹான் ஜெயசூரிய மற்றும் குசல் மெண்டீஸ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என இலங்கை கிரக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 தொடரின் இரு போட்டிகளை நியூஸிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந் நிலையில் மூன்றாவது போட்டி நாளை மறுதினம் பல்லேகல மைதானத்தில் ஆரம்பாகவுள்ளது. இதேவளை நேற்றைய …

மேலும் வாசிக்க

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்தார் மென்டிஸ்

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். உபாதை காரணமாக கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் நீண்ட காலமாக விலகியிருந்தார். அஜந்த மென்டிஸ், முரளிதரனின் திறமைக்கு மத்தியிலும் தனது தனித்திறமையை சர்வதேச அரங்கில் வெளிப்படுத்தியிருந்தார். 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மென்டிஸ் 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அத்துடன், 39 சர்வதேச …

மேலும் வாசிக்க

இலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்திய நியூஸிலாந்து

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கை கிரிக்கெட் அணியுடன் 2 டெஸ்ட், 3 இருபதுக்கு – 20 சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஆரம்பமான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் …

மேலும் வாசிக்க

ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர்

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் சர்வதேச கிரிகெட் சபையின் தலைவர் ஷஸாங்க் மனோகர் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனசந்தித்தார். இலங்கை கிரிகெட் துறையின் வளர்ச்சிக்காக அனைத்து ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக உள்ளதாக அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமைக்காக கிரிகெட் சபையின் தலைவருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன், கிரிகெட் போட்டிகளை அரசியல் தலையீடுகளின்றி முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால, …

மேலும் வாசிக்க

பாகிஸ்தானில் இலங்கை அணி விளையாடுவது உறுதி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் மூவகை கிரிக்கெட் தொடரில் சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் சர்வதேச இருபது 20 தொடருக்காக இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடும் என இலங்‍கை கிரிக்கெட்  நிறுவன ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் செப்டெம்பர் 27,29 மற்றும் ஒக்டோபர் 02 ல் கராச்சியில் இடம்  பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 …

மேலும் வாசிக்க

பவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை- அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர்

அவுஸ்திரேலிய அணி ஆசஸ் தொடரில் பவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தாது என அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றுவதற்கான எங்களின் திட்டம் என்னவென்பது எங்களிற்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள லாங்கர்,யார் வேகமாக பவுன்சர் வீசுகின்றர் என உணர்ச்சிகரமான மோதல்களில் நாங்கள் சிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இங்கு டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்காகவே வந்துள்ளோம் எத்தனை தரம் தலைக்கவசங்களை தாக்கலாம் என்பதற்காக வரவில்லை என …

மேலும் வாசிக்க

இந்திய அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்

இந்­திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்­குதல் நடத்த பயங்­க­ர­வா­திகள் திட்­ட­மிட்­டுள்­ள­தாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­ததை அடுத்து பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதாக இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இந்­திய கிரிக்கெட் அணி, மேற்­கிந்­தியத் தீவு­களில் விளை­யாடி வரு­கின்­றது. இவ்­விரு அணி­க­ளுக்­கி­டை­யி­லான டெஸ்ட் தொடர் நாளை  ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்­நி­லையில், அங்­கி­ருக்கும் இந்­திய அணி மீது பயங்­க­ர­வா­திகள் தாக்­குதல் நடத்தவிருப்­ப­தாக, தங்­க­ளுக்கு மின்­னஞ்சல் வந்­துள்­ளது என்று பாகிஸ்தான் கிரிக் கெட் சபை தெரி­வித்­துள்­ள­தாக இந்­தியச் …

மேலும் வாசிக்க