Latest News
Home / விளையாட்டு (page 40)

விளையாட்டு

7ஆவது ரி-20 உலகக்கிண்ண தொடர் குறித்த விஷேட பார்வை!

கிரிக்கெட் போட்டிகளில் இரசிகர்கள் அதிகம் விரும்பி பார்க்கும் ரி-20 கிரிக்கெட்டின் திருவிழா என வர்ணிக்கப்படும் ரி-20 உலகக்கிண்ண தொடரை கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த ரி-20 உலகக்கிண்ண தொடரின் 7ஆவது அத்தியாயம் அடுத்த ஆண்டு அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளமை யாவரும் அறிந்ததே! இத்தொடருக்கான தயார்படுத்தல்கள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இத்தொடருக்கான இறுதி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ரி-20 உலகக் கிண்ண தொடரில் 16 …

மேலும் வாசிக்க

யாழ்.வீராங்கனை தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு தெரிவு

தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீராங்கனை ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கையின் பளுதூக்கும் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆஷிகாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாமரி வர்ணகுலசூரிய தலைமையிலான இலங்கை பெண்கள் பளுதூக்குதல் அணியிலேயே யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீராங்கனை ஆஷிகா இடம்பிடித்துள்ளார். 13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி நேபாளத்தின் காட்மண்டுவில்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

ரி-20 தொடரில் இலங்கை அணியை வயிட் வோஷ் செய்தது அவுஸ்ரேலியா அணி!

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவதும், இறுதியுமான ரி-20 போட்டியில் அவுஸ்ரேலியா அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், இலங்கை அணியை அவுஸ்ரேலியா வயிட் வோஷ் செய்தது. மெல்பேர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, முதல் ஒவரிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது. …

மேலும் வாசிக்க

ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட ஸ்காட்லாந்து தகுதி பெற்றது

ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு ஒக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா 5 வெற்றிகள் மற்றும் ஒரு …

மேலும் வாசிக்க

அனுஸ்கா சர்மாவிற்கு தேநீர் வழங்குவது மாத்திரமே தெரிவுக்குழுவினரின் கடமையா?முன்னாள் வீரர் சீற்றம்

இந்திய தெரிவுக்குழுவினரை மிக்கிமவுஸ்கள் என சாடியுள்ள முன்னாள்  வீரர் பாருக் எஞ்சினியர் இந்திய அணியின் தெரிவுக்குழுவினர் விராட்கோலியின் மனைவிக்கு தேநீர் வழங்கியதை தான் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் தெரிவுக்குழுவினரை கடுமையாக சாடியுள்ள பாருக்எஞ்சினியர் தெரிவுக்குழுவினரை தகுதியற்ற மிக்கி மவுஸ் தெரிவுக்குழுவினர் என வர்ணித்துள்ளார். நாங்கள் ஒரு மிக்கி மவுஸ் தெரிவுக்குழுவினரை வைத்திருக்கின்றோம்,விராட்கோலி இதில் பாரிய தாக்கம் செலுத்துகின்றார் அது நல்ல விடயம் ஆனால்  தெரிவுக்குழுவில் இடம்பெறுவதற்கு தகுதியானவர்களே  இந்த …

மேலும் வாசிக்க

ஆட்ட நிர்ணய சதி குறித்து தகவல் வழங்க தவறினார் சஹீப் அல் ஹசன்- தடையை எதிர்கொள்கின்றார்

பங்களாதேஸ் அணியின் சிரேஸ்ட வீரர் சகீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழல் குறித்து அறிவிக்காதமைக்காக அவரிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அணிக்கான பயிற்சியில் சகீப் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசியின் உத்தரவின் பேரிலேயே  சஹீப் அல் ஹசன் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு பங்களாதேஸ் கிரிக்கெட் நிர்வாகம் தடை விதித்துள்ளது என  பங்களாதேசின் நாளேடு  தெரிவித்துள்ளது. இதன்காரணமாகவே …

மேலும் வாசிக்க

இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் விலகல்!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டமீம் இக்பால், இந்தியா அணிக்கெதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். டமீம் இக்பால், தனது சொந்த காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து விலகியுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. டமீம் இக்பாலின் மனைவி இரண்டாவது குழந்தையை பிரசவிக்கவுள்ளமையினால், டமீம் இக்பால், தனது மனைவியுடன் நேரத்தை செலவிட எண்ணியுள்ளார். ஆகையால் அவர் இத்தொடரிலிருந்து விலகியுள்ளார். டமீம் இக்பாலுக்கு பதிலாக இம்ரூல் கைஸ் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்டுள்ள போதும், அவர் …

மேலும் வாசிக்க

அவுஸ்ரேலியாவிடம் வீழ்ந்தது இலங்கை!

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு – 20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 134 ஓட்டங்களினால் அபார வெற்றிபெற்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் அடிலெய்டில் ஆரம்பாது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்து வீசத் தீர்மானித்து. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி டேவிட் வோர்னர் மற்றும் ஆரோன் பிஞ்சின் அதிரடியான ஆட்டத்தினால் ஓட்டங்களை …

மேலும் வாசிக்க

கோலாகலமாக ஆரம்பமானது 45 ஆவது தேசிய விளையாட்டு விழா

இலங்கை விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டித் தொடரான தேசிய விளையாட்டு விழா இன்று பதுளை வின்ஸ்டன்ட் டயஸ் மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. 2019 ஆண்டுக்கான  45ஆவது தேசிய விளையாட்டு விழாவை இம்முறை ஊவா மாகாணம் நடத்துகின்றது,  கடும் மழைக்கு மத்தியில் இன்றைய ஆரம்ப விழா நிகழ்வுகள் தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் மழையின் வேகம் குறைய ஆரம்ப நிகழ்வுகள் இயற்கையினால் தடைப்படாமல் நடந்து முடிந்தது. மகாணா ரீதியாக வீர வீராங்கனைகள் …

மேலும் வாசிக்க

மாற்றத்திற்கு பின்னரான அவுஸ்ரேலியா அணிக்கெதிரான விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் அதிரடி தலைமை மாற்றங்களுக்கு பின்னர், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குள் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின், எதிர்வரும் அவுஸ்ரேலியா அணியுடனான ரி-20 மற்றும் டெஸ்ட் தொடரை, கருத்திற் கொண்டு ரி-20 மற்றும் டெஸ்ட் அணியின் தலைமைகள் மாற்றப்பட்டன. இதற்கமைய மூன்று வகை கிரிக்கெட் …

மேலும் வாசிக்க