Latest News
Home / ஆலையடிவேம்பு (page 95)

ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் கொடியேற்ற நிகழ்வு இன்று… (படங்கள் இணைப்பு)

-அபிராஜ் ,சஜித்தன்- ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழா நேற்று (2019.09.03) பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகி இன்று (2019.09.04) காலை 11.00 மணியளவில் திருக்கொடியேற்றப் பெருவிழா நடைபெற்று அதனைத்தொடர்ந்து அன்னதான நிகழ்வும் சிறப்பானமுறையில் இடம்பெற்று முதலாம் நாளுக்கான காலை நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.                            

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் ஐந்தாம் நாள் பாற்குட பவணி…

செய்தி : ஹரிஷ் படங்கள் :அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய முகப்புத்தகம் அக்கரைப்பற்று மருதடி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த சனிக்கிழமை (23.08.2019) அக்கரைப்பற்று செல்லப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து மங்கள வாத்தியங்களுடன் வீதி வழியாக திருக்கொடி கொண்டுவரப்பட்டு பூர்வாங்க கிரியைகளுடன் கும்பபூசை வசந்த மண்டபூசையுடன் சுபவேளையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பானமுறைல் திருவிழா நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் நேற்று (24.08.2019) புதன்கிழமை ஐந்தாம் நாள் திருவிழாவானது காலை …

மேலும் வாசிக்க

புளியம்பத்தை மக்களின் குமுறலுக்கு ஒரே நாளில் தீர்வு!!! இணையத்தளத்திற்கு தங்கள் மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் தெரிவிப்பு

நேற்றைய தினம் ஆலையடிவேம்புவெப் இணையக்குழுவானது அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட சுமார் 45 குடும்பங்களைக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்ற புளியம்பத்தை கிராமத்திற்கு நேரில் சென்று புளியம்பத்தை கிராம மக்களின் பிரச்சனைகள் பற்றி கேட்டு அறிந்துகொண்டோம். அவர்கள் கூறிய முக்கிய பிரச்சனைகளில் சில 3 தொடக்கம் 5 வயதை உடைய ஆரம்பப்பாடசாலைக்கு (நேசரி பாடசாலை) செல்லும் பிள்ளைகள் 15 தொடக்கம் 20 பிள்ளைகள் இருக்கின்றார்கள் அவர்களை கல்வி கற்பதற்கு …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட புளியம்பத்தை கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டே செல்வதாக மக்கள் குமுறல்! (படங்கள் இணைப்பு )

-அபிராஜ்,கிஷோர்- அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட இயற்கை சூழலுடன் காணப்படும் அழகிய சிறிய கிராமமே புளியம்பத்தை கிராமம் இங்கு சுமார் 45 குடும்பங்கள் வசித்துவருகின்ற போதிலும் இவ் மக்களுக்கான தேவைகளோ மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. அந்த வகையில் புளியம்பத்தை கிராம மக்கள் அவர்கள் பிரச்சனைகள் பற்றி கூறிய விடயங்கள் பின்வருமாறு, கல்வி எங்கள் ஊரில் சுமார் 45 குடும்பங்களைக்கொண்ட 200 இற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்துவருகின்ற போதிலும் எங்கள் 3 தொடக்கம் …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தராக எமது மண்ணின் கி.சோபிதா இன்று பதவியேற்பு

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய நிருவாக உத்தியோகத்தராக செல்வி. கிருஷ்ணபிள்ளை சோபிதா இன்று (23) காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார். ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதனின் முன்னிலையில் இன்று காலை சுபவேளையில் தனது பெற்றோரின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர் வரவுப் பதிவேட்டில் கையொப்பமிட்டுக் கடமையைப் பொறுப்பேற்றார். அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் தரத்துக்குப் பதவி உயர்வு வழங்கும் பொருட்டு கடந்த வருடம் (2018) …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி பெரும் எதிர்பார்ப்புடன் நேற்று! Lions விளையாட்டு கழகம் champion.(படங்கள் இணைப்பு)

ஆலையடிவேம்பு உதயம் விளையாட்டு கழக ஆளுமைமிக்க வீரர்களான கவிராஜ், தீசன் அவர்களின் ஏற்பாட்டில் உதயம் விளையாட்டு கழகத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச பிரிவுக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான ஒற்றுமையினை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று(14) Lions விளையாட்டு கழகம் jolly boys விளையாட்டு கழகங்களுக்கு இடையில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இவ் இறுதிப்போட்டியில் Lions விளையாட்டு கழகம் jolly boys விளையாட்டு கழகத்தினை …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி…

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைவீடுகளை திருத்தம் செய்து பூர்த்தி செய்வதன் பொருட்டு 477 பயனாளிகளுக்கான காசேலை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று(09) நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இடம்பெற்ற …

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 477 குறை வீட்டுப்பயனாளிகளுக்கான காசேலைகள் வழங்கி வைப்பு.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் கம்பரலிய வேலைத்திட்டத்தின் கீழ் குறைவீடுகளை திருத்தம் செய்து பூர்த்தி செய்வதன் பொருட்டு 477 பயனாளிகளுக்கான காசேலை வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (09) நடைபெற்றது. இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசேலைகளை வழங்கி வைத்தார். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் செயலாளர் ரி.சுரேன் …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று இலவன் கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் புதிய சீருடை அறிமுக விழா…

  அக்கரைப்பற்று இலவன் கிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சீருடை அறிமுக விழாவானது வெள்ளிக்கிழமை அதாவது இன்று (09.08.2019) காலை 07.30 மணியவில் அக்கரைப்பற்று வச்சிக்குடாவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச சபை உறுப்பினர்கள் T.கிறோஜதரன் மற்றும் P.நடராஜா சிவம் அவர்களும் மேலும் விளையாட்டுக்கழக ஆலோசகர்கள் கழகஉறுப்பினர்கள் என பலரும் இந் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர்.  

மேலும் வாசிக்க

எமக்காக நாம், ஆலையடிவேம்பு வெப் இன்று முதல்.

வரலாற்றுத் தொன்மையும், பாரம்பரியமும் மிக்க எமது ஆலையடிவேம்பின் சிறப்புகளை உலகறியச்செய்யும் இலக்குடன் எமது ஊரின் நிகழ்வுகளை உடனுக்குடன் தாயக உறவுகளுக்கும் உலகெங்கும் பரந்துவாழும் எமது உறவுகளுடனும் பகிர்ந்து எமது உறவுகளின் இன்ப துன்பங்களின் பங்காளியாகவும், எமது அடையாளங்களை தாங்கி இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாக Alayadivembuweb.lk இன்றுமுதல் வலம்வரும். மேலும் Alayadivembuweb.lk இணையக்குழு உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். உங்களின் ஆலோசனைகளும் ஆதரவும் எம்மை மேலும் ஊக்கப்படுத்துவதுடன், …

மேலும் வாசிக்க