Latest News
Home / ஆலையடிவேம்பு (page 81)

ஆலையடிவேம்பு

மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் நிவாரணப்பணி

வி.சுகிர்தகுமார்   கொரோனா அச்சம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப்பணிகளில் இந்து அமைப்புக்களும் அம்பாரை மாவட்டத்தில் கைகோர்த்து செயற்படுகின்றன. இதற்கமைவாக  மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஸ்ணமிசன் அனுசரணையில் அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஊடாக பெறப்பட்ட 150 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சில பிரிவுகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று விபுலானந்தா இல்லத்தின் ஸ்தாபகரும் இந்து இளைஞர் மன்றத்தின் தலைவருமான இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் …

மேலும் வாசிக்க

சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன் வழங்கப்பட்ட உலர் உணவு

ஆலையடிவேம்பு சிவத்தொண்டர் அமைப்பு மற்றும் சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் அவர்களின் நிதி அனுசரணையுடன்ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தனது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்துகொள்ள முடியாதவறிய சுமார் 50 குடும்பங்களுக்கு தலா 1500/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் ஆலையடிவேம்பு பிராந்திய மதகுருமார்களுக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டது.

மேலும் வாசிக்க

ஆலையடிவேம்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனை….

வி.சுகிர்தகுமார்   உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டிய பிரார்த்தனைகளும் வழிபாடுகளும் நாட்டில் இன்று சர்வமத ஸ்தலங்களிலும் உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்த நிலையில் தாக்குதலில் இறந்தவர்களின் நினைவாக சகல மதஸ்தலங்களிலும் இன்று ஆத்மசாந்திய வேண்டிய பிரார்த்தனைகள் இடம்பெற்றன. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்து ஆலயங்களிலும் …

மேலும் வாசிக்க

அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு: ஆலையடிவேம்பு சமுர்த்தி வங்கிகளிலும் இன்று காலை 6 மணிமுதல் இவ் நிதி வழங்கும் பணி சுறுசுறுப்பாக…

வி.சுகிர்தகுமார் கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தில்  தொழிலை இழந்த 39969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுவருவதாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தெரிவித்தார். அம்பாரை மாவட்டத்தின் உள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்நடவடிக்கை சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்நடவடிக்கை இன்று காலை முதல் ஆரம்பமாகி இடம்பெற்று …

மேலும் வாசிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் கொவிட் 19 யை ஒழிப்போம்’ மருந்துகளின் ஒரு தொகுதி  ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

வி.சுகிர்தகுமார்  கொரோனா தொற்று நோயை எதிர்க்கும் சக்தி ஆயுர்;வேத உற்பத்தி மருந்துகளில் அதிகமாக இருப்பதாக இன்று உலகளாவிய ரீதியில் பேசப்படுவதுடன் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது. இலங்கை நாட்டிலும் ஆயுர்வேத உற்பத்திகளையும் மருந்தினையும் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் அமைந்துள்ளது. இதற்கமைவாக ‘ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் கொவிட் 19 யை ஒழிப்போம்’ எனும் தொனிபொருளுக்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களிலும் அரச அலுவலகங்களிலும் ஆயுர்வேத உற்பத்திகளை …

மேலும் வாசிக்க

சின்னப்பனங்காடு பிரிவில் சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதம்!!!

வி.சுகிர்தகுமார்   ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னப்பனங்காடு பிரிவில் உள்ள சிறிய வீடொன்று நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் சேதமாக்கப்பட்டுள்ளது. சின்னப்பனங்காடு நாககாளி ஆலய வீதியில் வாழும் வருமானம் குறைந்த தாயொருவரின் வீடே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நடைபெற்றபோது தனியாக வாழ்ந்துவரும் குறித்த தாய் வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்ததாகவும் அப்போது பலத்த காற்று வீசிய நிலையில் பாரிய சத்தம் தனக்கு கேட்டதாகவும் அத்தாய் கூறினார். இதனையடுத்து  அவர் வீட்டை விட்டு உடன் …

மேலும் வாசிக்க

மரக்கறிகளின் விலையில் தளம்பல் – சிகரட் விற்பனை நிலையத்திலும் அதிகளவான மக்கள்-சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் மக்கள்…

வி.சுகிர்தகுமார் ஊரடங்கு சட்டம் இன்று காலை தளர்த்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசங்களில் மக்கள் சமூக இடைவெளியை பேணாது பொருட்கொள்வனவில் ஈடுபட்டதை காண முடிந்தது. இதேநேரம் சதோச உள்ளிட்ட முக்கிய வியாபார நிலையங்களில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டதன் காரணமாக அங்கு வருகை தந்த மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்ததையும் அவதானிக்க முடிந்தது. பாதுகாப்பு தரப்பினர் பலத்த பாதுகாப்பையும் அதேநேரம் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களையும் வழங்கி தங்களது கடமையினை சிறப்பாக முன்னெடுத்த …

மேலும் வாசிக்க

அரச உத்தியோகத்தர்கள் மீது அவதூறு பதிவுகளை முகநூலில் பதிவேற்றம் செய்யும் பேக்ஜடி உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை!!!

வி.சுகிர்தகுமார்  பிரதேச செயலக கிராம சமுர்த்தி மற்றும் கொரோனா வேலைத்திட்ட பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்கள் மீதாக சுமந்தப்படும் உண்மைக்கு புறம்பான அவதூறு குற்றச்சாட்டுக்களை முகநூலில் பதிவேற்றம் செய்யும் பேக்ஜடி உள்ளிட்ட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்தனர். அக்கரைப்பற்று இராணுவ முகாமின் 241ஆம் படைப்பிரிவின் கட்டளை இடும் அதிகாரி ஜானக விமலரெட்ண தலைமையிலான இராணுவத்தினருக்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் செயலாளர் கே.லவநாதன் தலைமையிலான கிராம …

மேலும் வாசிக்க

பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆலையடிவேம்பின் சில பகுதி குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு.

வி.சுகிர்தகுமார் பிரித்தானியா சைவத்திருக்கோவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்று அம்பாரை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் வழங்கி வைக்கப்பட்டது. நாவிதன்வெளி காரைதீவு சம்மாந்துறை ஆலையடிவேம்பு பொத்துவில் ஆகிய பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. ஒன்றியத்தின் இணைப்பாளரும் பல கண்டுபிடிப்புக்களை கண்டு பிடித்து இளம் விஞ்ஞானி என பெயர் பெற்று நம் நாட்டிற்கு பெயர் சேர்த்த …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்

வி.சுகிர்தகுமார் அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பகுதிகளில் மிகவும் அமைதியான முறையில் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது. அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கமைய மக்கள் தமது வழிபாடுகளை வீடுகளில் இருந்தாவறே மேற்கொண்டதுடன் பொங்கல் பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டனர். இதேநேரம் ஆலயங்கள் தோறும் அமைதியான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அக்கரைப்பற்று ஸ்ரீ வீரம்மாகாளியம்மன் ஆலயம், ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயங்களிலும் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இதில் குருமார் மற்றும் பூஜை உபயகாரர்கள் மாத்திரம் கலந்து கொண்டதையும் …

மேலும் வாசிக்க