Latest News
Home / ஆலையடிவேம்பு (page 78)

ஆலையடிவேம்பு

அறநெறி ஆசிரியர்களுக்கான நிவாரணப்பொதிகள் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் நிருவாகத்தினர் வழங்கி வைத்தனர்.

வி.சுகிர்தகுமார்  கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. இப்பணிகளில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட அறநெறி ஆசிரியர்களுக்கான நிவாரணப்பொதிகளை அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தினர் நிருவாகத்தினர் வழங்கி வைத்தனர். ஆலய தலைவர் க.கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற  நிவாரணப்பணியில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் …

மேலும் வாசிக்க

சிவில் சமூகக் கூட்டமைப்பினால் சிறுவர் பாதுகாப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கான சுகாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு.

வி.சுகிர்தகுமார் கொவிட் 19 இனை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயலணி மற்றும் கொவிட் 19 பதிற் செயற்பாட்டிற்கான சிவில் சமூகக் கூட்டமைப்பினால் அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள சிறுவர் பாதுகாப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லங்களிற்கான சுகாதாரப் பொருட்களை வழங்கி வருவதுடன் சிறுவர் இல்லங்களை கண்காணித்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கையினை மனித எழுச்சி நிறுவனமான எச்இஓ  மற்றும் யுஎஸ்எயிட் நிறுவனத்தின் உதவியுடன் மேற்கொண்டு …

மேலும் வாசிக்க

இலஞ்சஊழல் குற்றச்சாட்டில் கைதான செயலாளர் மற்றும் திட்டமிட்டல் பணிப்பாளர், முழுவிபரம்..!

அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சப்ரிகம வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக 60 இலட்சம் ரூபா பெறுமதியான 3 வீதிகளின் புனரமைப்பு பணியை ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குவதற்காக இவர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த ஒப்பந்தக்காரர்கள் இலஞ்ச ஒழிப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர் …

மேலும் வாசிக்க

நம் தேசத்தில் கரங்கள் அமைப்பினால் 250 மேற்பட்ட மாணவர்களுக்கு பாட செயலட்டைகளை வழங்கி வைக்கப்பட்டது.

வி.சுகிர்தகுமார்   கற்றல் நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முயற்சியில் கல்விச்சமூகம் பெரிதும் அக்கறை காட்டி வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட நம் தேசத்தில் கரங்கள் அமைப்பானது மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதற்காக பல கல்வி சார்ந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இன்று அமைப்பின் பணிப்பாளர் க. பிரதீப் ஆலோசனையின் கீழ் அமைப்பின் தலைவர் ப. பாலகிருஸ்ணன் தலைமையில் ஆலயடிவேம்பு பிரதேசத்துக்கு உட்பட்ட கண்ணகிபுரம் மகா வித்தியாலயம், பனங்காடு பாசுதேசுவரர் மகா …

மேலும் வாசிக்க

ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்- மீறுகின்றவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தவர்

வி.சுகிர்தகுமார் ஆலய வழிபாடுகளில் 5 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என தெரிவித்த ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் இதனை ஆலய நிருவாகமும் பொதுமக்களும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். சமய வழிபாடு மற்றும் ஆலயங்களின் இடம்பெறவுள்ள உற்வசம் விசேட வழிபாடுகள் தொடர்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து …

மேலும் வாசிக்க

ஆலம் விழுதுகள் அமைப்பானது திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளை இன்று வழங்கி வைத்து

வி.சுகிர்தகுமார் அரசாங்கத்தின் சௌபாக்கியா வீட்டுத்தோட்ட மரநடுகை பசுமைப்புரட்சி வேலைத்திட்டத்திற்கு இணைவாக தனியார் தொண்டு அமைப்புக்களும் வீட்டுத்தோட்டத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்ட ஆலம் விழுதுகள் அமைப்பானது கனடா உதவி அமைப்பின் நிதியுதவியுடன் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் 100 குடும்பங்களுக்கான வீட்டுத்தோட்ட பயிர்கன்றுகளையும் நாற்றுக்களையும் இன்று வழங்கி வைத்து மரநடுகை திட்டத்தையும் ஆரம்பித்து வைத்ததுடன் பொதுமக்களை ஊக்கவிக்கும் முகமாக நிவாரணத்தையும் …

மேலும் வாசிக்க

சிவகாமி அன்னையின் ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க ஊழியர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு…

சிவகாமி அன்னையின் 84வது ஜனன தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு உதவும் ஆட்டோ சங்க 24 ஊழியர்களுக்கான உலர்உணவு நிவாரணத்தை பொத்துவில் பிரதேச செயலாளர் R.திரவியராஜ் மற்றும் அன்னை சிவகாமி அறக்கட்டளையின் இனைப்பாளர் சோ.வினோஜ்குமார் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர். இலங்கையிலும் கொரோனா அச்சத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்னை சிவகாமி அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாதேவன் சத்தியரூபன் அவர்களினால் பத்து வருடங்களுக்கு மேலாக …

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று தீவுக்காலை பகுதில் 5 அடிவரை வளர்ந்தும் அறுவடை செய்ய முடியாத பொன்னாங்கணி கீரை!!

  வி.சுகிர்தகுமார்   அம்பாரை மாவட்டமானது பயிர்ச்செய்கையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் பிரதேசமாக மாறிவருகின்றது. ஆனாலும் பயிர்ச்செய்கையின் மூலம் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை சந்தையில் விற்பனை செய்ய முடியாத நிலையும் உருவாகி வருகின்றது. மேலும் அவர்களது  உற்பத்திகளுக்கு தகுந்த விலை கிடைக்காமையினால் பயிர்ச்செய்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் பொன்னாங்கணி செய்கைக்கு பெயர் பெற்ற அக்கரைப்பற்று தீவுக்காலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 10 ஏக்கருக்கும் மேற்பட்ட பொன்னாங்கணி அறுவடை செய்ய …

மேலும் வாசிக்க

சாத்தியமான பாடசாலைகளில் உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

வி.சுகிர்தகுமார்   மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை ஆரம்பிக்கும் முகமாக பொருத்தமான நோய்தொற்று இல்லாத பிரதேசங்களின் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்கமைவாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள சாத்தியமான பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஒரு கட்டமாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை உயர்தர மாணவர்களின் பெற்றோர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு இன்று பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. …

மேலும் வாசிக்க

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் உறவுகளின் பங்களிப்புடன் ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு…

வி.சுகிர்தகுமார்   கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தின் பின்தங்கிய பல கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்கள்  வாழ்வாதார ரீதியில் பல நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு நெருக்கடிகளை சந்தித்துவரும் கிராம பெண் தலைமைத்துவ குடும்பங்களளுக்கு  தனியார் தொண்டு நிறுவனங்களும் அமைப்புக்களும் முடிந்தவரை உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கமைவாக ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்காக ஜேர்மன் நாட்;டின் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் மற்றும் …

மேலும் வாசிக்க