Latest News
Home / Kirishanth admin (page 570)

Kirishanth admin

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வெற்றிப் பெருவிழாவும் கெளரவிப்பும்….

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றப் பாதைக்கும், 2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்ற இதேவேளை, தங்களின் ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்குமாறு வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் கேட்டுக்கொண்டுள்ளார். அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வெற்றிப் பெருவிழாவும், 2019 ஜனாதிபதி சுற்றடல் தங்க விருதுபெற முன்னோடியாக உழைத்த வைத்தியசாலையின் ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் வைத்தியசாலையின் மண்டபத்தில் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம் …

மேலும் வாசிக்க

ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்பவர்களுக்கு சேவைநலன் பாராட்டுவிழா….

கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் ஆசிரியராக கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் திரு.சுப்பிரமணியம் சிவராசா மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர் திரு.சம்சன் இருவர்களையும் இன்று பாடசாலையின் ஒன்றுகூடலின் பொது அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள்மலர் மாலை அணிவித்து பாராட்டி கெளரவித்தனர். மேலும் பகுதித்தலைவர்,ஆசிரியர்கள், கலைப்பிரிவு மாணவர்கள், ஒய்வு பெற்றுச்செல்லும் திரு.சுப்பிரமணியம் சிவராசா அவர்களுக்கு இன்று (2019/11/28) வாழ்த்துமடல் மற்றும் நினைவுச் சின்னம்,பரிசில்கள் வழங்கி கெளரவித்தனர்.

மேலும் வாசிக்க

அக்கரைப்பற்று கண்ணகி கிராமத்தில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு!!!

அக்கரைப்பற்று கண்ணகி கிராமம் கல் உடைக்கும் மலை அருகாமையில் கத்தி வெட்டு காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்பு. இந்த சம்பவம் 2019/11/28 இரவு இடம்பெற்றுள்ளது. இவர் கண்ணகி கிராமத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி தேவரூபன் என இனம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். (முகப்புத்தக பதிவில் பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)

மேலும் வாசிக்க

முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு ஆற்றிலிருந்து மீட்பு

அமெரிக்காவின்  கிராண்ட் ஆற்றில் முதலாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜேர்மன் நாட்டு கையெறிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   மேக்னட் பிஷ்சிங் எனப்படும் ஆழமான நீர்நிலைகளில் புதையுண்டு கிடக்கும் பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபரொருவரின் தேடலின் விளைவாக இந்த ஜேர்மன் நாட்டுத் தயாரிப்பான கையெறிகுண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தின் கிராண்ட் எனப்படும் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே பிரதேசத்தை சேர்ந்த மேக்னட் பிஷ்சிங்யில் ஈடுபடும் ஜோசப் அலெக்சாண்டர்,  என்பவரால் குறித்த கையெறி குண்டு …

மேலும் வாசிக்க

அம்பாறையில் வெள்ளம் காரணமாக விவசாயம் பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக படுவான்கரை, நிந்தவூர், அட்டப்பள்ளம் காரைதீவு, சம்மாந்துறை, மாவடிப்பள்ளி போன்ற பிரதேசத்தின் நெல் வயல்கள் மழை வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. தொடர்ச்சியாக வெள்ள நீர் வயல்களில் தேங்கியுள்ளதால் வேளாண்மை அழிந்து வருகின்றது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. நிந்தவூர் காரைதீவு எல்லையில் அமைந்துள்ள முகத்துவாரத்திற்குச் செல்லும் வாய்க்காலில் காணப்பட்ட ஆற்று வாழைகள் காரைதீவு …

மேலும் வாசிக்க

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய திட்டங்கள் இடைநிறுத்தம் – அமைச்சர்

முறையான விசாரணை நடைபெறும் வரை பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதி திட்டம் மற்றும் டெப் வழங்குவதை நிறுத்திவைப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் அவை தொடர்பாக விசாரணைகள் நடைபெறும் வரை நிறுத்திவைப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் அறிமுகப்படுத்தினார். இருப்பினும் இந்த திட்டத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக செய்திகள் …

மேலும் வாசிக்க

தமிழ் மக்கள் ஒருமித்து பயணிப்பது காலத்தின் தேவை – கோடீஸ்வரன் எம்.பி.

தமிழ் மக்கள் ஒருமித்து பயணிக்கும்போது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொண்டு எதிர்காலத்தில் மக்களுக்காக குரல்கொடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் சமூகத்தின் சொத்தாக கல்வி இருக்கின்றது எனவும் இனி வரும் காலங்களில் கல்வியில் பாரிய வளர்ச்சியினை அடைய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 2019 ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் தோற்றி சித்திபெற்ற 16 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காரைதீவு …

மேலும் வாசிக்க

கமு/திகோ/ஸ்ரீ/இராமகிருஸ்ணா கல்லுரி சாதனையாளர் பாராட்டுவிழா…

பங்களாதேசில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கமு/திகோ/ஸ்ரீ/இராமகிருஸ்ணா கல்லூரியைச் சேர்ந்த மாணவன்   3ம் இடத்தினைப்பெற்று வெண்கல பதக்கத்தினை பெற்று பாடசாலைக்கும், பாடசாலை சமுகத்திற்கும்,திருக்கோவில் கல்வி வலயத்திற்கும், RKO சங்கத்திற்கும் பெருமையை பெற்றுத்தந்த எஸ்.ரிசோபன் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் அதிபர் திருமதி.சோமபால தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் அதிதிகளாக திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயக்கல்வித் பணிப்பாளர் திரு.வை.ஜெயச்சந்திரன்,பாடசாலை அதிபர் திருமதி.சோமபால, உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் …

மேலும் வாசிக்க

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் மனநோய் ஏற்படக்கூடும்!

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் டிமென்சியா என்ற மனநோய் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் முயற்சிகளை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்ந்தால் படிப்படியாக சுயநினைவை இழந்து டிமென்சியா எனும் நாட்பட்ட மனநோய் ஏற்படலாம் என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முற்பட்டால் முதல் பிரச்சினையாக இருப்பது சுகாதார குறைபாடுகள் தான். அவற்றில் …

மேலும் வாசிக்க

லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், லிப்ஸ்டிக் போடும் போது கண்டிப்பாக இதை செய்யுங்கள்!

சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். லிப்ஸ்டிக் போடும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மகிழ்ச்சி, துக்கம், சோகம், விருப்பு, வெறுப்பு, கோபம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இருக்கும் முக்கித்துவத்தை விட உதடுகளுக்கு பெரும் பங்குண்டு. சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் …

மேலும் வாசிக்க