Latest News
Home / Kirishanth admin (page 560)

Kirishanth admin

சொந்த வீட்டில் ராஜிதவை காணவில்லை…. சி.ஐ.டி தொடர்ந்தும் வலை வீச்சு

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன ஒருநாளுக்குள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் ராஜித சேனாரத்னவை காணவில்லை என்பதனால் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரைத் தேடி விசாரணையை ஆரம்பித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே …

மேலும் வாசிக்க

மழையுடனான வானிலை தொடருமா? – வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை டிசம்பர் 25 ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக சிறிது குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், நாட்டின் வடக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அத்தோடு ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என …

மேலும் வாசிக்க

ராஜிதவை கைது செய்ய பிடியாணை – நீதிமன்றம் அதிரடி

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய கொழும்பு மேலதிக நீதவானால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சி.ஐ.டி அளித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் பண்டாரா நெலும்தெனிய இந்த உத்தரவை பிறப்பித்தார். ரஜித சேனாரத்னவை கைது செய்ய சி.ஐ.டி. இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நீதிமன்றத்தில் பிடியாணை கோரியிருந்தது. இதன்பின்னர் பிடியாணை உத்தரவொன்றை பெற்று, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு …

மேலும் வாசிக்க

சம்பிக்கவின் சாரதியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி, திலும் துசித குமாரவின் மனைவியினால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் உட்பட சிலருக்கு எதிராகவே இன்று (செவ்வாய்க்கிழமை) உயர் நீதிமன்றத்தில் அவரால் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராஜகிரிய விபத்து தொடர்பாக இன்று நீதிமன்றில் சரணடைந்த குறித்த சாரதி, கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனி …

மேலும் வாசிக்க

அம்பாறையில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர் கைது!

அம்பாறை ஒலுவில் பிரதேசத்தில் போலி நாணயத்தாள் தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் ஒன்றுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து அச்சு இயந்திரம் மற்றும் போலி நாணயத்தாள் தயாரிக்கும் தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்பாறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் கல்முனை தேசிய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலை அடுத்து இன்று பகல் 12 மணியளவில் தேசிய புலனாய்வுப் பிரிவினர் ஒலுவில் சந்தைப் …

மேலும் வாசிக்க

சமூக அமைப்புக்கள் மற்றும் பல அரச நிறுவனங்கள் இணைந்து ஆலையடிவேம்பில் டெங்கு ஒழிப்பு செயத்திட்டம் வெள்ளி அன்று ஆரம்பம்…

தற்போது காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையினால் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பல பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதாலும்,பல வீதிகளில் குப்பை கூளங்கள் காணப்படுவதனாலும் எமது பிரதேசமானது டெங்கு அச்சுறுத்தலுக்குட்பட்டதாக காணப்படுகின்றது. இவற்றினை கருத்திற் கொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பான செற்பாட்டினை எமது பிரதேசத்தில் மேற்கொள்வதற்கான சரியான திட்டத்தினை பிரதேச செயலாளரின் தலைமையில் நெறிப்படுத்துவதற்காக கடந்த 2019.12.17 ஆம் திகதி அன்று ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றம்,ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தக சங்கம், …

மேலும் வாசிக்க

ஐ.சி.சி.யின் ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பாரத்துக் காத்திருந்த ஒருநாள் துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. இதன்படி, தற்போது ஆண்டின் இறுதி தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் முதலாவதாக ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையை பார்க்கலாம். 1.இந்த பட்டியலில், இந்தியக் கிரிக்கெட் அணியின் விராட் கோஹ்லி …

மேலும் வாசிக்க

சுதந்திர தினத்தன்று தமிழில் தேசிய கீதம் பாடப்படமாட்டாது?

இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மட்டுமே பாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கொழும்பின் சுதந்திர சதுக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதந்திரதின நிகழ்வு குறித்து முன்னேற்பாட்டு கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) அனர்த்த முகாமைத்துவம், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சில் நடைபெற்றது. இதன்போதே, சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாட …

மேலும் வாசிக்க

வடகொரியாவின் கிறிஸ்மஸ் பரிசு தயாரா? அதிர்ச்சியில் அமெரிக்கா

சர்வதேசத்தின் கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் செவிமடுக்காது செயற்பட்டுவரும் வடகொரியா, ஏவுகணைகளை உருவாக்குவதற்கான தளபாடங்களின் உற்பத்தியை விரிவுபடுத்துவதாகத் தெரிகின்றது. இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுக்காவிட்டால், அந்த நாட்டுக்கு ‘கிறிஸ்மஸ் பரிசாக அதிர்ச்சியளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக வட கொரியா எச்சரித்துள்ள நிலையில், இந்த செய்தியானது அமெரிக்காவை சற்று அச்சமடைய வைத்துள்ளது. வட கொரியாவில் பாதுகாப்புத் தளபாடங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பப்பட்டு …

மேலும் வாசிக்க

வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு – அனைத்து பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கின

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் மாதுறு ஓயாவின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக இதுவரையில் சுமார் 7,300 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் சுமார் 12 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள. இதில் கிரான் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் கடும் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளனர். மாவடியோடை அணைக்கட்டினை …

மேலும் வாசிக்க