Latest News
Home / Kirishanth admin (page 555)

Kirishanth admin

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் வீட்டில் விசேட தேடுதல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேடுதல் பிடியாணை உத்தரவின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த தொகுதியிலுள்ள அவரது வீட்டிலேயே இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றுள்ளது.  

மேலும் வாசிக்க

அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு குறைவு: எவ்வித நாட்டமும் இல்லை- சுமந்திரன்

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்றபோது அரசியல் தீர்வுக்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட உடனேயே அவருக்கு ஒருசில விடயங்களை நினைவுப்படுத்தியிருக்கிறோம். ஜனாதிபதிக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே குறித்த மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டுமென நாம் பகிரங்கமாக ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தோம். ஆனாலும்  …

மேலும் வாசிக்க

கவனக்குறைவால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை: கல்முனையில் சம்பவம்

கவனக்குறைவால் உடல் வலிக்கு தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கல்முனையை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெல்லாவெளி- தம்பலாவத்தை பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை வேளை, பெரியவர்கள் உடல் வலிக்கு பயன்படுத்தும் தைலத்தை அருந்தியதால் மயக்க நிலை அடைந்த குழந்தையை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர். பின்னர் குறித்த குழந்தையை மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்து சிகிச்சை …

மேலும் வாசிக்க

அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

கடந்த காலப்பகுதியில் அரசியல் ரீதியில் பழிவாங்கும் நோக்கத்தில் அரசாங்கம் மற்றும் அரச சார்பு நிறுவனங்களின் அதிகாரிகளை இலக்காக கொண்டு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குறிப்பிட்ட உடனடி நடைமுறைகளுக்கு அப்பால் விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலைமையை விசாரணை செய்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக ஓய்வு பெற்ற உயர் நீதி மன்ற நீதியரசரான ஜகத் பாலபடபெதி தலைமையில் குழு ஒன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த குழுவின் செயலாளராக செற்படுவதற்காக சட்டத்தரணி …

மேலும் வாசிக்க

எஸ்.எல்.சி.யின் தடைக்கு எதிராக திலங்க மேன்முறையீடு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபால, தன்னை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து இடை நீக்கம் செய்தமைக்கு சுயாதீன விசாரணை கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சராகவிருந்த ஹரின் பெர்னாண்டோ, திலங்க சுமதிபால எதிர்காலத்தில் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் எந்த வித  பதவிகளை வகிக்கவோ அல்லது நிர்வாகத்தில் எந்த வித நடவடிக்கையில் ஈடுபடவோ …

மேலும் வாசிக்க

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை குறித்து த.தே.கூ.வினர் கவலை!

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாகவோ அதற்கான தீர்வுகள் தொடர்பாகவோ எந்த விடயமும் குறிப்பிடப்படால் இருந்தமை கவலையளிக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை பாராளுமன்ற எதிர்க்கட்சி காரியாலயத்தில் சந்தித்தி கலந்துரையாடியமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக எதுவும் …

மேலும் வாசிக்க

அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் – ஈரான் பதில் அறிவிப்பு

ஈரானின் இதயம் காயப்பட்டிருக்கிறது எனவும் அமெரிக்கா தனது கொடூரக் குற்றத்திற்காக பழிவாங்கப்படும் என்றும் ஈரானின் ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டதற்காக அந்நாட்டு ஜனாதிபதி அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளார். சுலைமான் கொல்லப்பட்டமை குறித்து ஹசன் ருஹானி இன்று (வெள்ளிக்கிழமை) கூறுகையில், “அமெரிக்காவின் இந்த கொடூரக் குற்றத்திற்கு ஈரான் போன்ற சிறந்த நாடும் அதன் பிராந்தியத்தில் உள்ள பிற …

மேலும் வாசிக்க

புதிய ஆட்சியில் ஜனாதிபதி, பிரதமருடன் சம்பந்தனின் சந்திப்பு

நாடாளுமன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுவாரஷ்யமாக கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து சபை ஒரு மணிவரை ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் சபாநாயகரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் அனைவரும் கலந்துகொண்டிருந்ததன் பின்னர் இடம்பெற்ற விருந்து உபசாரத்தின் போதே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, …

மேலும் வாசிக்க

போலி மாணிக்கக்கற்களுடன் கல்முனையில் 6 பேர் கைது

பல இலட்சம் பெறுமதியானது என ஏமாற்றி  போலி மாணிக்கக்கற்களை வெளிநாட்டவர்களுக்கு  விற்பனை செய்ய முயன்றதாகச்  சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு சந்தேகநபர்களை பொலிஸார்  கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகே நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில்  குறித்த சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனையில் நிலைகொண்டுள்ள கடற்படையின் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற தகல்களை அடுத்து பொலிஸாரின்  உதவியுடன் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். …

மேலும் வாசிக்க

வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்குகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கவுள்ளதென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைக்கமையவே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பாக பரீசிலிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் …

மேலும் வாசிக்க