Latest News
Home / Kirishanth admin (page 554)

Kirishanth admin

வெள்ளை வான் ஊடகச் சந்திப்பு – சந்தேகநபர்கள் மூவரும் பிணையில் விடுதலை

வெள்ளை வான் ஊடகச் சந்திப்பு தொடர்பாக கைதான சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் தலா 5 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவரென கைதுசெய்யப்பட்ட அரச, மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட்டும் 5 லட்சம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர்களை பிணையில் விடுதலை செய்வதாக …

மேலும் வாசிக்க

இலங்கை கிரிக்கெட் சபையிடம் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரும் முன்னாள் பயிற்சியாளர்!

ஓப்பந்தகாலம் முடிவடைவதற்கு முன்னரே பதவி நீக்கம் செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹதுருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையிடம் சுமார் 90 கோடி ரூபாய் நஷ்ட ஈட்டுத் தொகையினை கோரியுள்ளார். இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளரான மோஹன் டி சில்வா உறுதி செய்துள்ளார். மேலும், தன்னை குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் தனது …

மேலும் வாசிக்க

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் வெளியாகின!

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் சி.ஐ.டி. மூத்த அதிகாரிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுக்கு ரஞ்சன் ராமநாயக்க அழுத்தம் கொடுத்ததாக இந்த உரையாடல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் குறித்த தொலைபேசி உரையாடல் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த உரையாடல்கள் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டு சில மணிநேரங்களில் …

மேலும் வாசிக்க

பகிடிவதையில் ஈடுபட்டால் 8 வருடங்களுக்கு பரீட்சை எழுத தடை!

பல்கலைக்கழங்களில் பகிடிவதை நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடம் பரீட்சை எழுத தடை விதிக்கும் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் பல்வேறு புதிய நடைமுறைகள் மற்றும் சட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அதற்கமைய பாடசாலை அனுமதியின் போது நேரடியாகவோ மறைமுகமாகவோ லஞ்சம் கோரப்பட்டால் 48 மணித்தியாலத்திற்குள் பணி நீக்கம் செய்யப்படுவர். அதேவேளை பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 8 வருடங்களுக்கு பரீட்சை …

மேலும் வாசிக்க

எனது வாக்குவங்கியையும் அதிகரிக்க வேண்டும்: என்னையும் கைதுசெய்யுங்கள் – மனோ

அரசாங்கத்தால் கைது செய்யப்படுபவர்களின் வாங்கு வங்கி அதிகரிப்பதால், தன்னையும் அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் வேட்டையாடும் நடவடிக்கையைக் கைவிட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மத்திய வங்கி பிணைமுறி தொடர்பாக விசாரணையை நடத்துமாறும் அர்ஜூன மகேந்திரணை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு …

மேலும் வாசிக்க

புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் – மாலிங்க!

புத்தாண்டை புதிய நம்பிக்கையோடு எதிர்கொள்கிறோம் என இலங்கை இருபதுக்கு இருபது கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதல் இருபதுக்கு இருபது போட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே லசித் மாலிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இருபதுக்கு இருபது உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறினாலே நான் ஓய்வு …

மேலும் வாசிக்க

கருணாவை பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் – கோடீஸ்வரன் எம்.பி

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைப் பார்த்து பயம் வந்துவிட்டது என்பது உண்மைதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.   கல்முனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்திற்கு தற்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் கருணா பிரதி அமைச்சராக இருந்த காலத்தில் அம்பாறை …

மேலும் வாசிக்க

அமெரிக்க அரசாங்க இணையத்தளத்தினுள் நுழைந்தது ஈரானின் ஹக்கர் குழு!

அமெரிக்க அரசாங்கத்துக்குரிய இணையத்தளம் ஒன்றுக்குள் அத்துமீறிப் பிரவேசித்துவிட்டோம் என ஈரானிலுள்ள ஹக்கர் குழுவொன்று அறிவித்துள்ளது. ஈரான் இராணுவத் தளபதி மீதான தாக்குதலுக்கு பழிவாங்கலாக இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக அந்தக்குழு தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ‘Federal Depository Library Program (fdlp.gov)’ எனும் இணையத்தளத்தில் நுழைந்து தளத்தின் பெயரை ‘ஈரானிய ஹக்கர்கள்’ என குறித்த குழு மாற்றியுள்ளது. இந்தத்தளம் அமெரிக்க குடிமக்களுக்கு அரசாங்க வெளியீடுகளை எந்த செலவுமின்றி அணுக வடிவமைக்கப்பட்டுள்ளது. …

மேலும் வாசிக்க

லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகள்: காசிம் சோலெய்மனியின் திட்டங்கள் குறித்து ட்ரம்ப்

லண்டன் முதல் புதுடெல்லி வரை நடந்த பயங்கரவாத சதிகளில்  அமெரிக்காவால் கொல்லக்கப்பட்ட ஈரான் தளபதி காசிம் சோலெய்மனியின் பங்கு இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து டொனால்ட் ட்ரம்ப நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களிடம் தெரிவிக்கையில், “பயங்கரவாதத்தின் ஆட்சி முடிந்துவிட்டது. காசிம் சோலெய்மனிக்கு புதுடெல்லி மற்றும் லண்டன் வரை நடந்த பயங்கரவாத சதிகளில் பங்கு இருந்தது. ஈராக்கில் அமெரிக்க இலக்குகள் மீதான சமீபத்திய தாக்குதல்கள், ஒரு …

மேலும் வாசிக்க

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த மாதிவெலயிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் இன்று மாலை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அவரது கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் மேல் மாகாண தென் பிராந்திய குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் சோதனையிட்டிருந்தனர். இதன்போது, நுகேகொடை நீதவான் நீதிமன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடுதல் …

மேலும் வாசிக்க