Latest News
Home / தொழில்நுட்பம் / 2020 இல் வெளியாகும் iPhone SE 2 முக்கிய அம்சங்கள் வெளியாகியது

2020 இல் வெளியாகும் iPhone SE 2 முக்கிய அம்சங்கள் வெளியாகியது

அடுத்த வருடம் (2020) முதல் காலாண்டில் வெளியாகவுள்ள அப்பிள் நிறுவனத்தின் iPhone SE 2 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2020 முதல் காலாண்டில் iPhone SE 2 அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன் விலை சுமார் 28,200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. colour, RAM மற்றும் storage models உள்ளிட்ட iPhone SE 2 இன் ஏனைய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், iPhone SE 2, 3GB LPDDR4X RAM உடன் இணைக்கப்பட்டு, A13 Bionic chip இயக்கப்படும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. ஸ்டோரேஜ் ஆப்ஷனில் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி வழங்கப்படும்.

இது 3D Touch ஆதரவை வழங்காது என்று கூறப்படுகிறது. Space Grey, Silver மற்றும் Red ஆகிய நிறங்களில் iPhone SE 2 வெளிவரும். iPhone SE அறிமுகப்படுத்தப்பட்ட விலையைப் போலவே, iPhone SE 2 இன் விலை 28,200 ரூபாய்யாக காணப்படும்.

இதன் வடிவமைப்பு iPhone 8 ஐப் போலவே வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

iPhone SE 2, முகப்பு பொத்தானில் integrate Touch ID உடன் 4.7-inch LCD display காணப்படும். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்திய பிறகு, iOS 13 இன் சமீபத்திய பதிப்பில் இயங்கும்.

எனினும் 2020 ஆம் ஆண்டில், iPhone SE 2-யின் 30-40 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்யும் என்று Apple கணித்துள்ளது.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *