Latest News
Home / விளையாட்டு / மீண்டும் இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள சந்திமல்

மீண்டும் இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ள சந்திமல்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமல் நியூசிலாந்துக்கு எதிரான உத்தேச 22 பேர் கொண்ட இலங்கை டெஸ்ட் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகின்றது.

இதில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணி இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில், குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள உத்தேச 22 வீரர்கள் அடங்கிய பட்டியலை இலங்கை கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ளது.

அண்மைய நாட்களாக அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த தினேஷ் சந்திமல் இந்த உத்தேச டெஸ்ட் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

 

இலங்கை அணியின் முன்னணி வீரரான சந்திமல், மோசமான துடுப்பாட்ட பெறுபேறுகள் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டதுடன், உலகக் கிண்ண இலங்கை அணியிலும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பங்கேற்காத ஏஞ்சலோ மத்தியூஸூம் இந்த குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

சுழல்பந்து வீச்சாளர்களான அகில தனஞ்ஜய, டில்ருவான் பெரேரா ஆகியோரும், சகலதுறை வீரர் தனுஷ்க குணதிலக, வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார ஆகியோரும் அணிக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

 

குறித்த 22 பேர் கொண்ட அணி, 15 பேர் கொண்ட அணியாக மாற்றப்படவுள்ளதுடன், அதில் யார் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

அணி விபரம் – திமுத் கருணாரட்ன (அணித்தலைவர்), ஏஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமல், லஹிரு திரிமன்னே, குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, தனஞ்ஜய டி சில்வா, ஏஞ்சலோ பெரேரா, ஒசாட பெர்ணான்டோ, தனுஷ்க குணதிலக, ஷெகான் ஜெயசூரிய, சமிக்க கருணாரட்ன, டில்ருவான் பெரேரா, அகில தனஞ்ஜய, லசித் எம்புல்தெனிய, லக்ஷான் சண்டகன், சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்ணான்டோ, கசுன் ராஜித, அசித பெர்ணான்டோ

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *