Latest News
Home / இலங்கை / துறைமுக நகரின் முழுமையான உரிமை யாருக்கு?

துறைமுக நகரின் முழுமையான உரிமை யாருக்கு?

துறைமுக நகர திட்டத்தில் சீன மேம்பாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு விட இலங்கை அரசின் ஒப்புதலும் தேவை என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் சட்டபூர்வ நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று (18) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு நீதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

“உலகில் முதலீட்டாளர்கள் பார்க்கும் இரண்டு குறியீடுகள் உள்ளன, இதில் வணிகம் செய்ய சிறந்த நாடுகள் இருக்கும் இடத்தில் நாம் இருப்பது 99 வது இடத்திலாகும்.

அதாவது நாம் மற்ற 98 நாடுகளை கடந்து வர வேண்டும். மேலும், ஒரு ஒப்பந்தம் தொடர்பாக சிக்கல் ஏற்படும் போது, ​​நாங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லும் போது 165 வது இடத்தில் இருக்கிறோம். எனவே, முதலீட்டாளரைப் பெற ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த முதலீட்டு மண்டலத்தின் மொத்த பரப்பளவு 269 ஹெக்டேர் ஆகும்.

பொது வசதிகளுக்காக 91 ஹெக்டேர். அவற்றைக் கொடுக்க முடியாது. திட்ட நிறுவனத்திற்கு 116 ஹெக்டேர் (43%). இதை உருவாக்க 2013 ஆம் ஆண்டில் ரூ .1.4 பில்லியனை செலவிட்டவர்கள் அவர்களே. நம்மிடம் இன்னும் கடலின் ஒரு பகுதி மட்டுமே உள்ளது. 23 சதவீதம் அரசின் பங்குகள்.ஆனால் இது 100% அரசாங்கத்திற்கு சொந்தமானது, அரசாங்கமே உரிமையாளர். வேறொருவருவருக்கு பாதி நிலம் கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்வது முற்றிலும் தவறானது. ” என்றார்.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *