Latest News
Home / இலங்கை / திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம்

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம்

வி.சுகிர்தகுமார் 

 அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம்’ திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இன்று (20) நடைபெற்றது.

இராணுவத்தின் 242 ஆவது கட்டளை அதிகாரி ஹெமால் பீரிஸின் பங்குபற்றுதலோடு இடம்பெற்ற இக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம் ,கோவிட்19 தொற்று, டெங்கு மற்றும்   மலேரியா பரவல் தொடர்பான அபாயத்தினைக் குறைப்பது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது.

கலந்துரையாடலில்  242ஆவது படைப்பிரிவின் சமூக விழிப்பூட்டல் உத்தியோகத்தர் கேணல் விஜயரத்ன, மற்றும் சாகாம விசேட அதிரடி படை பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ராஜபக்ச, சங்கமன் கிராம கடற்படை பொறுப்பதிகாரி தம்மிக்க, உதவிப்பிரதேச செயலாளர். ம.சதிசேகரன், அனர்த்த முகாமைத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வு.தனராஜ்,  பிரதேச சபை செயலாளர் சத்தியசீலன் ,திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மசூத் மற்றும் தம்பிலுவில் கமநல மத்திய நிலைய உத்தியோகத்தர் அஜந்தன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி கமலகாந்தன். பிரதேச செயலக கணக்காளர். அரசரெத்தினம், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக கிராம  உத்தியோகத்தர் பரிமளவாணி சில்வஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த இக்கலந்துரையாடலின் பின்னர் பல முக்கிய  சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன

வடிகான்களை துப்பரவு செய்தல். வெற்று வளவுகளில் அமைக்கப்பட்டிருக்கும் பாவனை அற்ற கிணறுகளை மண் இட்டு மூடுதல். டெங்கு ,மலேரியா கட்டுப்படுத்தல் குழுவினர்களின் தீர்மானங்களை நடைமுறைக்கொண்டுவருதல், பிரதேச செயலகம் இராணுவம், கடற்படை,  பொலிஸ் விசேட அதிரடிப்படை, சுகாதார திணைக்களம், பிரதேச சபை,  மற்றும் ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் ஒன்றிணைந்ததான வேலை திட்டங்களை அமுல்பத்துதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இத்தீர்மானங்களினால் பிரதேச மட்டத்தில் ஏற்படும்  அனத்த அபாயங்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் இங்கு  தெரிவிக்கப்பட்டது.

Check Also

பட்டிருப்பு வலய பாடசாலைக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிய இணைந்த கரங்கள் அமைப்பு…

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட் /விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *