Latest News
Home / தொழில்நுட்பம் / அதிரடி விலை குறைப்பில் Oppo புதிய தொலைபேசி அறிமுகம்

அதிரடி விலை குறைப்பில் Oppo புதிய தொலைபேசி அறிமுகம்

Oppo A11 சில வாரங்களுக்கு முன்பு சீனா டெலிகாமில் காணப்பட்ட பின்னர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த தொலைபேசி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A5 2020 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது.

Oppo A11 சீனாவில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு சுமார்  15,100 ரூபாய் ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் விற்பனைக்கு வருகின்றது.

Stream Purple, Cloud White மற்றும் Lake Green நிறங்களில் கிடைக்கும். நினைவுகூர, Oppo A11 X கடந்த மாதம் சீனாவில் சுமார் 18,000 ரூபாய்யாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது Marine Green மற்றும் Space Purple நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Oppo A11, ColorOS 6.0.1 உடன் Android 9 Pie இல் இயங்குகிறது. இது 6.5-inch HD+டிஸ்பிளேவுடன் waterdrop-style notch-ஐக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் octa-core Snapdragon 665 SoC-யால் இயக்கப்படுகிறது. இது Oppo A5 2020 இன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகும். Oppo A11 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

குறிப்பிட்டுள்ளபடி, A11 X இல் 48 மெகாபிக்சல் பிரதான சென்சாருக்கு பதிலாக, A1 ஆதரவுடன் 12 மெகாபிக்சல் ஷூட்டரும், A11 போர்டில் குவாட் கமரா அமைப்பும் உள்ளது. 119 டிகிரி பார்வைக்கு wide-angle lens உள்ளது. பின்புற கமரா அம்சங்களில் 1080p video recording, Night View 2.0, EIS மற்றும் பல உள்ளன.

ஆனால், A5 2020 இல் இரண்டாம் நிலை 8-megapixel ultra-wide-angle camera, 2-megapixel monochrome shooter மற்றும் portraits இக்கு 2-megapixel depth sensor ஆகியவை இருக்கும். கூடுதலாக, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆன்போர்ட் ஸ்டோரேஜைப் பெறுவீர்கள். Oppo A11-ல் Dolby Atmos ஆதரவு, 3D finish, Game Boost 2.0 மற்றும் rear fingerprint sensor ஆகிய ஏனைய அம்சங்களும் அடங்கும்.

இதேவேளை Oppo A9 2020 அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. தொலைபேசியின் 4 ஜிபி ரேம் 1,000 ரூபாய் விலைக் குறைப்பில் இப்போது  15.990 ரூபாய்க்கு கிடைக்கிறது.

விலை குறைப்புக்குப் பிறகு, Oppo A9 2020-யின் 4 ஜிபி ரேமின் விலையான 16.990 ரூபாய்லிருந்து 15,990 ரூபாய்க்கு கிடைக்கிறது. கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இது முதல் விலைக் குறைப்பு ஆகும். 8 ஜிபி ரேமின் விலை 19,990 ரூபாய்யாகும்.

Check Also

மனிதனைக் கொன்ற ரோபோ! தென்கொரியாவில் பரபரப்பு

தென்கொரியாவிலுள்ள தொழிற்சாலையொன்றில் ரோபோவொன்று பெட்டிக்கு பதிலாக ஊழியர் ஒருவரை பெல்டில் ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *